நடுவானில் விமானத்தின் ஜன்னலை எட்டி உதைத்து பிரித்தானியர் தகராறு! வேறு நகரத்தில் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அவதி
லண்டனிலிருந்து புறப்பட்ட விமானத்தில் நடுவானில் பிரித்தானியர் ஒருவர் ஜன்னல் கண்ணாடிகளை உதைத்து தகராறு செய்ததால் வேறு நகரத்திற்கு திருப்பிவிடப்பட்டது.
செவ்வாக்கிழமையன்று லண்டனில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு புறப்பட்ட விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில் பிரித்தானியர் ஒருவர் பணியாளர்களைத் தாக்கியதாகவும், விமானத்தின் கண்ணாடிகளை உதைத்து நடுவானில் தகராறில் ஈடுபட்டதால், விமானம் சால்ட் லேக் சிட்டிக்கு திருப்பி விடப்பட்டது. இதனால், சக பயணிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
விமானக் குழுவினரையும் பயணிகளையும் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அந்த 'அடங்காத' பயணி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் 39 வயதான பிரித்தானியர் வில்லியம் ஸ்டீபன் ஹேய்ஸ் என்றும், அவர் விமானத்தில் ஒரு கட்டத்தில் கோபமடைந்ததாகவும் சால்ட் லேக் சிட்டி காவல் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமானக் குழுவினர் அவரை அமைதிப்படுத்த முயற்சித்ததை அடுத்து, ஹேய்ஸ் வன்முறையில் ஈடுபட்டதாகவும், பயணிகள் மற்றும் பணியாளர்களால் உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது.
கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஹேய்ஸ் விமானக் குழுவினரையும் குறைந்தது ஒரு பயணியையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது, இதன் விளைவாக சிறிய காயங்கள் ஏற்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும், அவர் விமானத்தின் இருக்கைகள் மற்றும் ஜன்னல்களையும் உதைத்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் காரணமாக செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4:30 மணியளவில் விமானம் சால்ட் லேக் சிட்டிக்கு திருப்பி விடப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர், அங்கு சட்ட அமலாக்க அதிகாரிகள் ஹேய்ஸை கைது செய்தனர். அவர் பெடரல் தடுப்பு காவலில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து, விமானம் நான்கு மணி நேர தாமதத்திற்குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸுக்குத் சென்றது என்றும் சிரமத்திற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டம், விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.