நடுவானில் லண்டன் விமானத்தில் கோர சம்பவம்... உடைந்த போத்தலால் பயணி மீது சரமாரி தாக்குதல்
லண்டனில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பயணி ஒருவர் உடைந்த போத்தலால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலைவெறி தாக்குதல்
லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் இருந்து கரீபியன் தீவுக்கு திங்களன்று புறப்பட்டு சென்ற விமானத்திலேயே தொடர்புடைய கொலைவெறி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
@getty
விமானம் சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது பயணிகள் இருவர் கடும் விவாதத்தில் ஏற்பட்டுள்ளனர். அதில் ஒருவர், சமையலறை பக்கம் சென்று கத்தியுடன் திரும்பியதுடன், போத்தல் ஒன்றை உடைத்து சக பயணி ஒருவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதில் அந்த பகுதி மொத்தமும் ரத்தம் வழிந்த நிலையில் காணப்பட்டது. ஆனால் துணிச்சல் மிகுந்த விமான ஊழியர்கள், அந்த நபரை எதிர்கொண்டதுடன், அவரிடம் இருந்து போத்தலையும் கைப்பற்றியுள்ளனர்.
பறக்கும் விமானத்தில் நடந்த சம்பவம்
காயம்பட்ட நபருக்கு உடனடியாக முதலுதவிகள் அளிக்கப்பட்டதுடன், இருவரையும் விமான ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும், அந்த விமானம் கரீபியன் தீவுகளுக்கு தொடர்ந்து பயணித்துள்ளது.
@PA
இந்த நிலையில், St Lucia காவல்துறை சார்பில் தெரிவிக்கையில், பறக்கும் விமானத்தில் நடந்த இந்த சம்பவம், தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும், இது மிக மோசமான சம்பவம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |