லண்டனுக்கு 356 பயணிகளுடன் கிளம்பிய விமானம் வேறு நாட்டில் அவசர தரையிறக்கம்! வெளியான காரணம்
சிங்கப்பூரில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய பயணிகள் விமானம் திடீரென அசர்பைஜான் நாட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
லண்டனுக்கு கிளம்பிய விமானம்
356 பயணிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.44 மணிக்கு கிளம்பிய விமானம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு செல்லவிருந்தது. இந்த நிலையில் விமானமானது அசர்பைஜான் நாட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இது தொடர்பாக Swedish Flightradar24 தளத்தில் தெரிவிக்கையில், அவசரநிலைக்கான தகவல் தொடர்பு குறியீடுகளை தொடர்ந்து விமானம் அசர்பைஜான் தலைநகர் பாகுவில் உள்ள ஹெய்டர் அலியேவ் சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிடப்படாத தரையிறக்கத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photographs taken shortly after landing this morning of the Qantas A380 VH-OQH at Heydar Aliyev Int’l Airport.
— Mohammed Firaas Naeem (@mofiraas) December 23, 2022
Flight #QF1 was flying from Singapore @ChangiAirport to London @HeathrowAirport when it was diverted to Baku earlier today.
Photos by Trend News Agency @trend_en. pic.twitter.com/Tu1vhe1cWM
356 பயணிகள்
பாகு விமான நிலையத்தின் பேஸ்புக் பக்கத்தில், 356 பயணிகள் விமானத்தில் இருந்ததாகவும், சரக்குகள் வைக்கும் பகுதியில் புகை கிளம்பிய காரணத்தால் விமானத்தை திடீரென தரையிறங்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் பாகுவில் எவ்வளவு நேரம் இருந்தது என்பது தொடர்பான தகவல்கள் தெரியவில்லை.