கனடாவில் தரையிறங்கிய வெளிநாட்டு விமானம்... மாயமான ஊழியரால் நீடிக்கும் மர்மம்
இதுவரை குறித்த ஊழியர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என தெரியவந்துள்ளது.
அக்டோபர் 14ம் திகதி முதல் மாயமாகியுள்ளார் எனவும் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கனடாவின் ரொறன்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமான ஊழியர் ஒருவர் திடீரென்று மாயமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ரொறன்ரொ சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை குறித்த பாகிஸ்தான் விமானம் தரையிறங்கியுள்ளது. ஆனால் இதுவரை குறித்த ஊழியர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என தெரியவந்துள்ளது.
மாயமாகியுள்ள ஊழியரின் பெயர் இஜாஸ் ஷா எனவும், அக்டோபர் 14ம் திகதி முதல் அவர் மாயமாகியுள்ளார் எனவும் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 4 மனிக்கு தொடர்புடைய பாகிஸ்தான் விமானம் ரொறன்ரோவில் தரையிறங்கியுள்ளது.
THE CANADIAN PRESS IMAGES
ஆனால் குறித்த விமானம் ஞாயிறன்று புறப்படத் தயாரான நிலையில், அந்த ஊழியர் பணிக்கு திரும்பாத நிலையில், அவர் மாயமாகியுள்ளதாக நிர்வாகிகள் தரப்பு அறிவித்துள்ளது.
மாயமான ஊழியர் தொடர்பில் கனேடிய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாயமான ஊழியர் தொடர்பில், அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.