பிரித்தானியாவில் தரையிறங்கும்போது வெடித்து தீப்பிழம்பான விமானம்: பரபரப்பான காட்சிகள்
இங்கிலாந்து விமான நிலையம் ஒன்றில் தரையிறங்கிய விமானம் ஒன்று தீப்பிழம்பை தெறிக்கவிடும் பரபரப்புக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனியிலிருந்து நேற்றிரவு புறப்பட்ட சரக்கு விமானம் ஒன்று, இங்கிலாந்தின் East Midlands விமான நிலையத்தில் தரையிறங்கும்போது அதன் எஞ்சின்களில் ஒன்று தீப்பிடித்தது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என The Scottish Sun பத்திரிகை தெரிவித்துள்ளது.
வெளியாகியுள்ள புகைப்படங்களில் விமானத்தின் பக்கவாட்டிலிருந்து ஆரஞ்சு நிறத்தில் தீப்பிழம்புகள் தெறிப்பதைக் காணலாம்.
அந்த விமானம் தரையிறங்கும்போது டமாரென ஒரு பலத்த சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.
தீ கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, விமானத்தின் எஞ்சினிலிருந்து புகை எழுவதையும் புகைப்படங்களில் காணமுடிகிறது.
எதனால் அந்த விமானத்தின் எஞ்சின் வெடித்தது என்பது இதுவரை தெரியவரவில்லை. ஆனால், எஞ்சினுக்குள் ஏதோ இழுக்கப்பட்டதை தான் பார்த்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.