பாலத்தின் கீழ் மாட்டிக்கொண்ட ஏர் இந்தியா விமானம்! வைரலாகும் வீடியோக்கள்
டெல்லியில், ஏர் இந்தியா விமானம் ஒன்று தரைவழியே கொண்டுசெல்லும்போது பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.
குருகிராம்-டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஐஜிஐ விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பயன்படுத்தப்படாத பழைய ஏர் இந்தியா விமானம் ஒன்றை பெரிய வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.
இறக்கை இல்லாத அந்த விமானத்தின் உடல் பாகத்தை, நீளமான ட்ரைலர் டிரக்கில் வைத்து தரைவழியே கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
GROUNDED: An Air India aircraft gets stuck under a pedestrian footbridge while being transferred outside the New Delhi airport, India. https://t.co/fRPeSqHOcQ pic.twitter.com/ZxajtKKDzR
— ABC News (@ABC) October 6, 2021
அப்போது டெல்லி-குருகிராம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு நடைபாதை மேம்பாலத்தை கடக்கும்போது உரசி சிக்கிக்கொண்டது. விமானத்தின் மூக்கு மற்றும் அதன் நடுப்பகுதியின் பாதி பகுதி அதை கடந்து சென்றது, ஆனால் விமானம் பாலத்தின் கீழ் சிக்கியது.
இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, வைரலானது. அந்த வீடியோ வைரலானபோது, அது எப்படி அங்கு வந்தது என்று பலரும் குழப்பமடைந்தனர்.
#WATCH An @airindiain plane ✈️ (not in service) got stuck under foot over bridge. Can anyone confirm the date and location?
— Ashoke Raj (@Ashoke_Raj) October 3, 2021
The competition starts now? pic.twitter.com/pukB0VmsW3
அதேசமயம், அந்த விமானம் நிறுவனத்தால் அழிக்கப்பட்டு விற்கப்பட்டது என்பதை ஏர் இந்தியா தெளிவுபடுத்தியது.
"எந்த சூழ்நிலையிலும், விமானத்துடன் எந்த தொடர்பும் இல்லை" என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் அந்த விமானம் பதிவுநீக்கம் செய்யப்பட்டு அழிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.