பறக்கும் விமானத்தில் தூங்கிய இளம்பெண்! கண்விழித்த போது அவரை அதிர்ச்சியடைய வைத்த காட்சி
அமெரிக்காவில் விமானத்தில் பயணிக்கும் போது தூங்கிய இளம்பெண் கண்விழித்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
லாஸ் வேகாஸில் இருந்து வாஷிங்டன் டிசிக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் கடந்த 24ஆம் திகதி பெண்ணொருவர் பயணித்தார்.
அவர் அருகே 26 வயதான Ivan Lopez Jr என்ற இளைஞன் உட்கார்ந்திருந்தார். அப்பெண் விமான இருக்கையில் தூங்கி சாய்ந்தபடி இருந்தார், திடீரென கண்விழித்த போது பக்கத்தில் உட்கார்ந்திருந்த Ivan தன் மீது கை வைத்து தவறாக நடந்து கொண்டதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து உடனடியாக விமான பணிப்பெண்களிடம் புகார் கொடுத்தார். விமானம் தரையிறங்கிய பின்னர் பொலிசார் Ivan-ஐ கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
Ivan மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.