விமானம் தரையிறங்கிய சில நிமிடத்தில் மயங்கி விழுந்த பணிப்பெண் உயிரிழப்பு
லண்டன் Stansted விமானம் தரையிறங்கிய சில நிமிடத்தில் விமானப் பணிப்பெண் மயங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தரை இறங்கிய விமானம்
24 வயதான கிரேட்டா டைர்மிஷி Air Albaniaவில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த கிருஸ்துமஸ் தினத்திற்கு முன்பு லண்டன் Stansted எனும் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களுக்குப் பின்பு திடீரென கிரேட்டா மயங்கி விழுந்துள்ளார்.
@Kukës International Airport
பின்பு சக ஊழியர்கள் அவருக்கு முதலுதவி செய்திருக்கிறார்கள் ஆனால் கிரேட்டா பரிதாபமாக உயிரிழந்தார்.
இறப்புக்கான காரணம்
கிரேட்டாவின் இறப்புக்கான காரணத்தை பற்றி மருத்துவர்கள் அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து ஆராய்ச்சி செய்தனர்.
இந்த நிலையில் கிரேட்டா SADS எனும் திடீர் இளம் வயது இறப்பு நோய் அறிகுறி எனப் பிரேத பரிசோதனை முடிவில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் மட்டும் கிட்டதட்ட 5000 பேர் இந்த நோய்க்கு உயிரிழக்கிறார்கள் என அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் கிரேட்டாவின் மாரடைப்புக்கான காரணத்தை எளிதில் சீபிஆர் எனும் முதலுதவி மூலம் காப்பாற்றி விட முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
கிரேட்டாவுடன் டைர்மிஷி Air Albaniaபில் பணிபுரிந்த பணியாளர்கள் கிரேட்டா மிகவும் அன்பானவள் என்றும் எல்லோரோடும் நேசத்தோடு பழகக் கூடியவள் என்றும் அவளது இறப்பு வருத்தத்திற்கு உரியது எனவும் தெரிவித்துள்ளனர்.