லண்டனிலிருந்து இத்தாலி நோக்கிச் சென்ற விமானம்: எஞ்சினிலிருந்து நெருப்பு வெளியேறும் காட்சி
லண்டனிலிருந்து இத்தாலிக்குச் சென்ற விமானம் ஒன்றின் எஞ்சினிலிருந்து நெருப்பு வெளியேறும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
லண்டன் Stansted விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Ryanair விமானம் ஒன்று, இத்தாலியிலுள்ள Bologna நகரின் விமான நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்திருக்கிறது.
அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக, heron எனப்படும் பறவைகளின் கூட்டத்தின் மீது விமானம் மோதியுள்ளது.
விமானம் மோதியதில், சில பறவைகள் சிதற, விமானத்தின் முன் பக்கம் இரத்தமும் இறகுகளுமாக பரவி விமானியின் பார்வையை மறைத்துள்ளன.
சில பறவைகள் விமானத்தின் வலது பக்க எஞ்சினுக்குள் இழுக்கப்பட, எஞ்சின் மோசமாக சேதமடைந்து நெருப்பைக் கக்கியுள்ளது.
ஆனால், விமானிகள் சமயோகிதமாக செயல்பட்டு பாதுகாப்பாக விமானத்தைத் தரையிறக்கியுள்ளார்கள். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் பறவைகளைத் தவிர யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.