மீண்டும் ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் மர்ம ட்ரோன்கள்: விமான சேவை பாதிப்பு
வெள்ளிக்கிழமையன்று ஜேர்மனியின் பெர்லின் விமான நிலையத்தில் மர்ம ட்ரோன்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து அங்கு விமான சேவை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு விமான நிலையத்தில் ட்ரோன் ஒன்று பறந்ததால் அங்கும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு விமான நிலையத்தில் மர்ம ட்ரோன்
ஜேர்மனியின் Bremen நகரிலுள்ள விமான நிலையத்தில், நேற்று, அதாவது, ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் ட்ரோன் ஒன்று தென்பட்டுள்ளது.

அதுவும், விமான நிலையத்துக்கு மிக அருகிலேயே அந்த ட்ரோன் பறந்ததாக பொலிஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரத்துக்கு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யார் அந்த ட்ரோனை இயக்கியது என்பதும் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்ய உக்ரைன் போரில், ஜேர்மனி உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துவருவதால், இந்த ட்ரோன்களின் பின்னணியில் ரஷ்யா இருக்கலாம் என ஜேர்மனி தெரிவித்துள்ளது. ஆனால், ரஷ்யா அதை மறுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |