பிரான்சில் அதிக அளவில் தண்ணீரில் நிகழும் உயிரிழப்புக்கள்: பிழைத்துக் கொள்வதற்காக பிரெஞ்சு நகரம் ஒன்று உருவாக்கியுள்ள திட்டம்
பிரான்சில் அதிக அளவிலான உயிரிழப்புக்கள், தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பதால்தான் நிகழ்கின்றனவாம்.
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு பக்கம், சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கியோர், தண்ணீர் தொடர்பான பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லையாம்.
அதற்கு ஒரு காரணம், தனியார் நீச்சல் குளங்களில் சென்று நீச்சல் கற்றுக்கொள்ளும் அளவுக்கு வசதியில்லாமை.
ஆகவே, பிரான்சின் Marseille நகரவாசிகள் இந்த மக்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். அதாவது, தனியார் நீச்சல் குளங்களுக்குச் சென்று நீச்சல் கற்க இயலாதவர்களுக்கு, தங்கள் வீட்டிலுள்ள நீச்சல் குளங்களில், முறைப்படி பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் உதவியுடன் நீச்சல் பயிற்சி அளிப்பதுதான் அந்த திட்டம்.
Marseilleஇல் 10 முதல் 11 வயது வரையுள்ளவர்களில் 40 முதல் 50 சதவிகிதத்தினருக்கு நீந்தத் தெரிவதில்லை.
குறைந்த வருவாய் கொண்ட குடும்பத்திலுள்ள 11 முதல் 12 வயதுள்ளவர்களில் 75 சதவிகித மாணவ மாணவிகளுக்கு நீசல் தெரியவில்லையாம்.
ஒரு பக்கம் நீச்சல் தெரியவில்லை என்ற தர்மசங்கடமான உணர்வு இருக்க, மறுபுறம், லைஃப் கார்டு போன்ற தண்ணீர் சம்பந்தமான பணிகளுக்கும் அவர்கள் செல்ல முடியாத ஒரு நிலையும் உள்ளது.
ஆகவே, இத்திட்டத்தை உருவாக்கியுள்ள Marseille நகரத்தவர்கள், 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். கோடையில் இத்திட்டம் துவங்கிய நிலையில், இதுவரை நான்கே நீச்சல் குளங்களில் 20 இளைஞர்கள் நீச்சல் கற்றுள்ளார்கள். அவர்களில் 5 பேர் லைஃப் கார்டு பயிற்சியில் தேர்ச்சி பெற்றுவிட்டார்கள்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த படியாக 15 நீச்சல் குளங்களில் 75 இளைஞர்களுக்கு நீச்சல் பயிற்சி அளித்து, அவர்களுக்கு பட்டயப்படிப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிரான்சில் அதிக அளவிலான உயிரிழப்புக்கள், அதுவும் 25 வயதுக்கு கீழுள்ளவர்களின் உயிரிழப்புகள், தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பதால்தான் நிகழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பிலிருந்து பிழைத்துக்கொள்ளவும், வாழ்வில் ஒரு தண்ணீர் தொடர்பிலான ஒரு பணி மூலம் பிழைத்துக்கொள்ளவும் Marseille நகரம் எடுத்துள்ள முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்றுதான்...