அவுஸ்திரேலியாவில் கனமழை வெள்ளத்தில் மூழ்கிய 500 வீடுகள்! அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்
விக்டோரியா மாகாணத்திற்கு மிகப்பெரிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது
நியூசவுத் வேல்ஸ் நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 500 வீடுகள் மூழ்கின.
தென் கிழக்கு அவுஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, விக்டோரியா மாகாணத்தில் 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் 500 வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டதால், அப்பகுதியில் அவசரகால சேவைகள் துண்டிக்கப்பட்டன.
EPA-EFE
William WEST / AFP
டாஸ்மானியா பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 120 சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மெல்போர்னில் உள்ள சில சமூகங்கள் வேறு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
சாலைகள் மூழ்கடிப்பட்டுள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் 3000 வீடுகள் மற்றும் வணிக அங்காடிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
AFP
காலநிலை மாற்றம் மற்றும் லா நினா வானிலை நிகழ்வு ஆகியவற்றால் ஆஸ்திரேலியாவில் சமீபத்திய வெள்ளம் மோசமடைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், வரவிருக்கும் வாரங்களில் அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.