நாய்க்குட்டிக்காக குழிக்குள் இறங்கிய நபர்: அசரவைக்கும் மீட்பு காட்சிகள்!
அமெரிக்காவின் புளோரிடாவில் 15 அடி ஆழம் கொண்ட குழிக்குள் சிக்கிக்கொண்ட நாய்யை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
புளோரிடாவின் பாஸ்ட்டன் பகுதியில் கடந்த 9ம் திகதி 15 அடி ஆழத்திற்குள் நாய் ஒன்று சிக்கிக்கொண்டது. அதனை தொடர்ந்து அந்த தகவல் சவுத் வால்டன் தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
Hero firefighters rescue 'very friendly' dog from a 15-foot hole pic.twitter.com/v0h5N1o1i9
— The Sun (@TheSun) February 18, 2022
சம்பவ இடத்திற்கு வந்த சவுத் வால்டன் தீயணைப்பு துறையினர்கள் ஏணி ஒன்றை அமைத்து அந்த குழிக்குள் இறங்கி அந்த நாய்யை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த நாய்யை மீட்கும் வீடியோ பதிவை வெளியிட்டுள்ள அந்த தீணைப்பு துறை அந்த பதிவில் நாய் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மீட்பின் போது அந்த நாய்யும் நல்ல அமைதியுடன் ஒத்துழைப்பு தந்ததாகவும், மீட்பு நல்ல முறையில் வெற்றிகரமாக முடிவந்து இருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாய்யை மீட்கும் போது அதனை கண்காணிக்க அந்த பகுதியில் உள்ள வால்டன் கவுண்டி விலங்கு கட்டுப்பாடு என்ற அமைப்பும் அழைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.