நான்கு வயது சிறுவனை தலையில் குத்திய ஆசிரியர்: பள்ளியில் பொலிஸார் தீவிர விசாரணை
- நான்கு வயது சிறுவனை தாக்கிய புளோரிடா அசிரியர் கைது
- வழக்கு குறித்து அறிவிப்பு வரும் வரை ஆசிரியரை நிர்வாக விடுப்பில் வைப்பதாக பள்ளி நிர்வாகம் தகவல்
புளோரிடாவின் டுனெடினில் உள்ள கிண்டர்கேர் கற்றல் மையத்தில் பணிபுரிந்து வரும் ஆஷ்லே ரிச்சர்ட்ஸ்(32) என்ற ஆசிரியை நான்கு வயது பள்ளிச் சிறுவனை பலமுறை குத்தியதை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கிண்டகேர் கற்றல் மையத்தில் ஆஷ்லே ரிச்சர்ட்ஸ்(32) என்ற ஆசிரியை நான்கு வயது சிறுவனின் தலையில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
Google Maps
இதுத் தொடர்பாக பினெல்லாஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகத்துக்கு அடையாளம் தெரியாத சாட்சி அளித்த புகாரில், விளையாட்டு மைதானத்தில் இருந்து அலறல் சத்தம் கேட்டு பார்த்த போது ரிச்சர்ட்ஸ் தனது திறந்த கை மற்றும் மூடிய முஷ்டியால் தலையின் பின்புறம் மற்றும் தலையின் பக்கவாட்டில்" குத்துவதைக் கண்டேன் என வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஆசிரியை மீது குழந்தை துஷ்பிரயோகம் செய்த குற்றத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் மற்றும் நான்கு வயது சிறுவனிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், ஆசிரியை குழந்தையை அடிக்கவில்லை என்று மறுத்தார். ஆனால் சிறுவன் சிரிப்பதைத் தடுக்க அவனது வாயில் கையை வைத்ததாக ஒப்புக்கொண்டார் என ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Pinellas County Sheriff's Office
நான்கு வயது சிறுவன் அளித்த வாக்குமூலத்தில் தனது சகோதரனுடன் சண்டையிட்ட பிறகு , ரிச்சர்ட்ஸ் தன்னை தண்டனையின் ஒரு வடிவமாக தாக்கியதாகவும், தலையிலும் கண்ணிலும் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: சாலைப் பாலங்களை முடக்கியது உக்ரைனிய படைகள்: பிரித்தானிய உளவுத் துறை தகவல்!
இந்தநிலையில் கிண்டர்கேர் கற்றல் மையம், ஆசிரியர் அறிவிப்பு வரும் வரை நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்டதாகக் தெரிவித்தது. அதற்கு முன், ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.