கனடாவுக்குள் 50க்கும் அதிகமான தூப்பாக்கிகளுடன் நுழைய முயன்ற பெண் கைது!
ப்ளோரிடாவை சேர்ந்த பெண்ணொருவர் 56 துப்பாக்கிகளுடன் கனடாவுக்குள் காரில் நுழைய முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கனடா எல்லை சேவைகள் நிறுவனம் தெரிவிக்கையில், 48 வயதான பெண் ப்ளூ வாட்டர் பிரிட்ஜ் பார்டர் கிராசிங்கில் இரண்டாம் நிலை ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
விசாரணையின் போது அப்பெண்ணின் காரில் இருந்து 56 தடை செய்யப்பட்ட துப்பாக்கிகள், 100 தோட்டாக்கள், 43 pistol magazinesகள் கைப்பற்றப்பட்டது. அந்தப் பொருட்கள் பெண்ணின் காரின் டிக்கியில் இருந்த பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன.
துப்பாக்கிக் கடத்தல் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
மேலும் ஆபத்தான குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் கனேடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் எங்களின் உறுதியான அர்ப்பணிப்புக்கு இந்தக் கைப்பற்றல் ஒரு எடுத்துக்காட்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அப்பெண் 24ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.