நிலம், நீர் இரண்டிலும் தரையிறங்கும் பறக்கும் கார் அறிமுகம்
நிலம், நீர் இரண்டிலும் தரையிறங்கும் பறக்கும் காரை அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
டோக்கியோவில் நடந்த SusHi Tech Tokyo 2024 எனும் சர்வதேச தொழில்நுட்ப நிகழ்வில் பறக்கும் கார் (Flying Car) முதன்முறையாக அறிமுகமானது.
நகரின் கோட்டோ வார்டில் உள்ள Tokyo Big Sight convention center-க்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் பைலட்டுடன் கார் 10 மீட்டர் வரை பறந்தது.
Lift Aircraft Inc என்ற அமெரிக்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட காரின் பெயர் Hexa.
Hexa-வின் மேற்புறத்தில் 18 இறக்கைகள் (propellers) அமைக்கப்பட்டுள்ளன. இது 4.5 மீட்டர் அகலம், 2.6 மீட்டர் உயரம் மற்றும் தோராயமாக 196 கிலோகிராம் எடை கொண்டது.
இது ஒற்றை இருக்கை கார், இது நிலத்திலும் நீரிலும் தரையிறங்கக்கூடியது.
இந்தியாவிலும் Mahindra, Maruti Suzuki உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் பறக்கும் மின்சார கார்களை உருவாக்கி வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Flying Car, Hexa Flying Car, Lift Aircraft Inc, Japan, Tokyo