இண்டிகோ விமானத்தில் ரத்தவாந்தி எடுத்து உயிரிழந்த பயணி
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணி ரத்த வாந்தியால் உயிரிழந்தார்.
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 21) காலை மும்பையில் இருந்து ராஞ்சிக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் ஒருவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.
62 வயதான அந்த நபருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிகேடி மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த பயணிக்கு திடீரென ரத்த உறைவு ஏற்பட்டது. பின்னர் விமானத்தில் அப்பயணி திடீரென இரத்த வாந்தி எடுத்தார்.
indigo
இதன் காரணமாக அவசரகால சூழ்நிலையில் விமானம் நாக்பூரில் தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவர் இறக்கிவிடப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்டவர் உடனடியாக கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிம்ஸ் மருத்துவமனையின் பிராண்டிங் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் துறை டிஜிஎம் இஜாஷ் ஷமி தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Indigo Flight, Indigo Airlines, Emergency Landing