உடல் பருமனால் அவதிப்பட்ட பிரித்தானிய தாயார்... சிகிச்சைக்காக சென்ற வெளிநாட்டில் ஏற்பட்ட துயரம்
துருக்கியில் இரைப்பை நீக்க அறுவை சிகிச்சைக்காக தனியாக சென்ற பிரித்தானிய தாயார் ஒருவர், மருத்துவமனையில் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் மொத்த குடும்பத்தினரையும் உலுக்கியுள்ளது.
இறுதியில் துயரத்தில் முடிந்த பயணம்
துருக்கியில் இரைப்பை நீக்க அறுவை சிகிச்சை பாதுகாப்பாக முடியும் என்பதாலையே, 2,000 பவுண்டுகள் கட்டணமாக செலுத்தி சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டுள்ளார் 38 வயதான Leanne Leary என்ற 3 பிள்ளைகளின் தாயார்.
Image: Leanne Leary
ஆனால் அவரது இந்த பயணம் இறுதியில் துயரத்தில் முடிந்துள்ளது. துருக்கி மருத்துவமனையில் தனியாக மரணத்தை எதிர்கொண்டுள்ளார். தொடர்புடைய சிகிச்சையானது அவரது இரைப்பையில் 80 சதவீதம் அளவுக்கு நீக்குவதாகும்.
மேலும், முழு விடயமும் முற்றிலும் பாதுகாப்பானது என்றே லீன் கருதியுள்ளார். கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த லீன் ஜூன் 30ம் திகதி துருக்கி சென்றுள்ளார். அத்துடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, அங்கிருந்து புகைப்படம் ஒன்றையும் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளார்.
ஆனால் அறுவை சிகிச்சை முடிந்து பல மணி நேரத்திற்கு பின்னரும் அவர் தொடர்பில் எந்த தகவலும் குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்புகொண்ட குடும்பத்தினருக்கு அந்த அதிர்ச்சி தகவல் நொறுங்க வைத்துள்ளது.
@getty
திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அவர் நலமாக இருந்ததாகவே குறிப்பிட்ட மருத்துவமனை, ஆனால் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக லீன் மரணமடைந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.
தற்போது அவரது உடல் பிரித்தானியாவுக்கு எடுத்துவரப்பட்டு, இங்குள்ள மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு முன்னெடுக்கப்படும் என்றே கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக உடல் பருமன் காரணமாக லீன் அவதிப்பட்டு வந்துள்ளார் என்றே குடும்பத்தினர் கூறுகின்றனர்.
பிரித்தானியாவில் பல மருத்துவர்களை சந்தித்த லீன், அறுவை சிகிச்சைக்காக 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்தே துருக்கியில் சிகிச்சை எடுத்துக்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார்.
@getty
பிரித்தானியாவில், 12,000 பவுண்டுகள் செலவாகும் அந்த சிகிச்சைக்கு துருக்கியில் 2,000 பவுண்டுகள் மட்டுமே கட்டணமாக வசூலிக்கின்றனர்.
மேலும், அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொடர்புகொள்ள வேண்டிய நபர் தொடர்பில் லீன் எந்த தகவலும் மருத்துவமனையில் தெரிவிக்கவில்லை எனவும், இதனாலையே, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையால் அவரது குடும்பத்தினரை தொடர்புகொள்ள முடியாமல் போனது எனவும் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |