இனி இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பகிர முடியாதா? இன்ஸ்டாகிராம் தலைவர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
உலகம் முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் தளத்தில் வருங்காலத்தில் புகைப்படங்கள் பதிவிட முடியாது என அதன் தலைவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசோரி இந்த தகவல் குறித்த முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுவதாவது, “இனி வரும் காலத்தில் புகைப்படங்கள் பகிரக்கூடிய தளமாக இன்ஸ்டா இருக்காது என குறிப்பிட்டுள்ளார். அதோடு மட்டுமின்றி பொழுதுபோக்கு சார்ந்த முழுமையான தளமாக இன்ஸ்டாவை மாற்ற குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமை முழுமையான வீடியோ தளமாக மாற்றுவதற்கு அடிப்படை கட்டமைப்பு டெக்னாலஜி மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது.
இன்ஸ்டாகிராம் பயன்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில், பயன்பாட்டின் எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் தலைவர் மொசோரி தெரிவித்துள்ளார்”.
அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் புகைப்பட பதிவேற்றத்தையும் தாண்டி வீடியோ, மெசன்ஜர், ஷாப்பிங் உள்ளிட்டவைகளுக்கு கவனம் செலுத்தி புதிய சேவைகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.