பிரித்தானியாவில் விமான போக்குவரத்து குழப்பம்: ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என அறிவிப்பு
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பனிமூட்டம் காரணமாக தடைப்பட்டுள்ள விமான போக்குவரத்து சேவைகள் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து பாதிப்பு பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளை மூடியிருக்கும் அடர்த்தியான மூடுபனி காரணமாக நேற்று லண்டன் ஹீத்ரோ(Heathrow), லண்டன் கேட்விக்(Gatwick) மற்றும் மான்செஸ்டர்(Manchester) உள்ளிட்ட பல முக்கிய விமான நிலையங்களில் கணிசமான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பயணிகள் விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன்பு தங்கள் விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு விமான நிலையங்கள் அறிவுறுத்தின.
ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் தடை
இந்நிலையில் பல முக்கிய பிரித்தானிய விமான நிலையங்களில் தடித்த பனிமூட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள விமான போக்குவரத்து குழப்பம் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவின் முக்கிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு வழங்குநரான நாட்ஸ்(Nats) தெளிவான வானிலை குறைவாக உள்ள பகுதிகளில் தற்காலிக விமானக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வரை இந்தக் கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் விடுமுறை காலத்தின் மிகவும் பிஸியான நாளான ஞாயிற்றுக்கிழமை 769 விமானங்கள் திட்டமிடப்பட்டுள்ள கேட்விக்(Gatwick) விமான நிலையத்தில் ஏராளமான விமானங்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
[FGUPRRY[
பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு சமீபத்திய விமானத் தகவல் மற்றும் தாமதங்கள் அல்லது ரத்து செய்தல் குறித்த தகவல்களை பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தடித்த பனிமூட்டம் சில பகுதிகளில் பார்வையை 100 மீட்டர் வரை குறைக்க கூடும் என மெட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் முற்றிலும் பாதுகாப்பை முன்னுரிமைப்படுத்தி அமல்படுத்தப்படுவதாக நாட்ஸ்(Nats)தெரிவித்தார்.
மேலும், "நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம், மிகச் சமீபத்திய வானிலை தகவல்களை பெறுவதற்கு எங்கள் நடவடிக்கைகளில் ஒரு மெட் அலுவலக நிபுணரை ஒருங்கிணைத்துள்ளோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |