வயிறு உப்பிச பிரச்சினையா கவலையை விடுங்கள்! இதை ட்ரை செய்யுங்கள்!
நிறைய பேருக்கு உணவு உண்டவுடனே வயிறு உப்பி காற்று நிறைந்தாற்போல் இருக்கும்.இதனால் ஒரு அசௌகரியத்தன்மை எப்போதும் காணப்படும்.இதற்கு முக்கிய காரணமாக வயிற்றில் உருவாகும் அதீத வாயுப்பிரச்சினையை குறிப்பிடலாம்.வயிற்று செரிமானம் சம்பந்தமான தசைகளில் பிரச்சினை இருந்தாலும் இவ்வாறான உப்பிசப்பிரச்சினை உருவாகும்.
இதற்கு காரணம் என்ன?
இரண்டு வகையான காரணிகள் உப்பிசத்தை உருவாக்குகிறது.
1.குடலிலுள்ள பக்டீரியாக்கள் அதனை இயற்கையாக உருவாக்கும்
2.நாம் உண்ணும் குடிக்கும் சோடா போன்ற வாயு சேர்க்கப்பட்ட பானங்களால் இவை உருவாகும்.
ஒரே நேரத்தில் பல்வேறு வகையான உணவுகளை வயிறு நிறைய உண்ணுதல். மேலும் பல பேருக்கு இருக்கும் பழக்கம் உணவை மெண்டு உண்ணாமல் அப்படியே விழுங்குவது இதனால் வயிற்றில் காற்று சேருகிறது.
பால் மற்றும் கோதுமை மைதா உணவுகள்,முட்டை, கோவா ,பீன்ஸ் ,வெங்காயம் போன்றவை வாயுப்பிரச்சினையை ஏற்படுத்தக்கூடியவை.
image credit: instanews
எவ்வாறு உப்பிசத்தை தவிர்க்கலாம்?
- உணவை நன்றாக மெண்டு உண்ணுவதால் வாயு உட்செல்வது தடுக்கப்படுகிறது.
- அவ்வாறு செய்வதால் உப்பிச பிரச்சினையும் நீங்கும்.
- பால் மற்றும் கோதுமை மைதா உணவுகள்,முட்டை, கோவா ,பீன்ஸ் ,வெங்காயம்,வெள்ளைப்பூடு போன்ற வாயுப்பிரச்சினையை ஏற்படுத்தக்கூடிய உணவுகள் உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.
- இவற்றுள் எதனை உண்ணும்போது வாயுப்பிரச்சினை அதிகமாக ஏற்படுகிறது என கவனித்து அதனை உண்ணுவதை குறைத்துக்கொள்ளலாம்.
- கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் சோடாக்கள் போன்றவற்றை அருந்துவதை தவிருங்கள்.
image credit: samayam tamil
மலச்சிக்கல்
- இவை அனைத்திற்கும் மேலாக இருக்கும் பிரச்சினை மலச்சிக்கல் இதனை தீர்ப்பதற்கு அதிக திரவம் கொண்ட உணவுகள் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகள் எடுத்துக்ககொள்ளலாம்.
- மேலதிகமாக உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்.
- மலச்சிக்கலுக்கு தீர்வு காண்பதன் மூலம் வயிறு உப்பிசம் மற்றும் செரிமான பிரச்சினையையும் சரி செய்யமுடியும். இவை அனைத்தையும் செய்தும் உங்களுக்கு இப்பிரச்சினைகள் தொடர்கிறதென்றால் மருத்துவர் உதவியை அணுகுதல் சிறந்தது.