குளிர் காலத்தில் இந்த 7 விடயங்களை தவறாமல் பின்பற்றுங்கள்: மாராடைப்பு, பக்கவாதம் வராது
குளிர்காலம் ஆரம்பித்து வெப்பநிலை குறைய துவங்கியதால் இதய நோய் வருவதற்கு அபாயம் உள்ளது. இந்த சீசனில் கொழுப்பு அதிகரித்து நரம்புகளில் படிந்து விடுவதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகையால் இந்த குளிர்காலத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். இதனால், இந்த நோயாளிகள் 7 விடயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இரத்த அழுத்தம்
நீங்கள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க விரும்பினால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியமான ஒன்று.
உங்களது உணவில் உப்பை குறைத்து, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதையும் மறந்துவிடக் கூடாது.
புகைப்பழக்கம்
புகைபிடித்தல், மது அருந்துதல், புகையிலை நுகர்வு போன்றவை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இதனால் அவர்கள், மது அருந்துதல், புகைபிடித்தல், போதை பொருள்களை உட்கொள்ளுதல் மற்றும் சோடா மற்றும் விரைவான ஆற்றல் பானங்களை தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி
ஒரு நாளைக்கு 30 நாள்கள் உடற்பயிற்சி செய்தால் மட்டுமே போதுமானது. கடினமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம். காலை உடற்பயிற்சி, படிக்கட்டு ஏறுதல், ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
கொலஸ்ட்ரால்
இத்தகைய பாதிப்பு கொண்டவர்களுக்கு இரத்தத்தில் எல்டிஎல் கொழுப்பின் அளவு அதிகமானால், இரத்தத்தின் ஓட்டத்தை சீர்குலைக்கும்.
அதனால், இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பச்சையான பூண்டு மற்றும் வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கொலஸ்டராலின் அளவு கட்டுக்குள் வரும்.
இரத்த பரிசோதனை
உங்களது உடல் எந்த நிலையில் இருப்பது என்பதை கண்டறிய சர்க்கரை, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகிய பரிசோதனைகளை மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொள்ளுங்கள். ஏதேனும் உங்களுக்கு பிரச்சனை இருந்தால், மருத்துவரிடம் தீர்வு காணுங்கள்.
சீக்கிரம் எழுவதை தவிர்க்கவும்
உங்களுக்கு இதய நோய் இருந்தால் அல்லது பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் இருந்தால் காலையில் சீக்கிரம் எழுவதை தவிருங்கள். வெப்பநிலை சாதாரணமாக இருக்கும் போது எழுந்திருங்கள். இல்லையென்றால், இரதம் கட்டியாகி, சுழற்சியில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
குளியல்
குளிர்காலத்தில் குளிக்கும் போது பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டாம். சுடு தண்ணீரில் குளியுங்கள். முதலில் தலையில் தண்ணீரை ஊற்ற வேண்டாம். கால், முதுகு அல்லது கழுத்தில் தண்ணீர் ஊற்றியவுடன் தலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
குறிப்பு: செய்தியை படித்தவுடன், இந்த பரிந்துரைகளை பின்பற்றுவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவதற்கு மறக்க வேண்டாம்.