Home Loan -யை விரைவில் கட்டி முடிக்க இதை Follow பண்ணுங்க: அவசியம் தெரியவேண்டியவை
வீட்டுக் கடன் வாங்கி சொந்த வீடு வாங்கியவராக இருந்தால், அந்த கடனை விரைவில் கட்டி முடிப்பதற்கான சில டிப்ஸ்களை பற்றி பார்க்கலாம்.
வீட்டுக் கடன்கள்
சொந்த வீடுகள் கட்டுவது என்ற எண்ணம் எல்லோருக்கும் ஒரு பேராசையாகவே இருக்கும். ஆனால், நாம் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி அதை செலுத்துவதற்கு நாம் வாழ்நாள் முழுவதையுமே செலவழிக்க வேண்டி இருக்கும்.
அதுமட்டுமில்லாமல், சொந்த வீடு கட்டுவது மிடில் கிளாஸ் மக்களுக்கு எட்டா கனியாகவே இருக்கிறது. ஆனால், சிலர் கடன் வாங்கி வீடு கட்டுகின்றனர்.
வேறு வங்கிக்கு பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்
நீங்கள் வங்கியில் வாங்கியிருக்கும் வீட்டு லோனின் மீதமிருக்கும் பேலன்ஸ் தொகையை குறைவான வட்டி வழங்கும் மற்றோரு வங்கிக்கு டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம்.
இப்படி செய்வதன் மூலம், உங்களது EMI தொகையை குறைத்து விரைவில் உங்களது கடனை அடைக்கலாம்.
சரியான நேரத்தில் EMI
நீங்கள், உங்களது EMI தொகையை சரியான நேரத்தில் தான் காட்டுகிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்கு, ஆட்டோ-டெபிட் (Auto Debit) ஆப்ஷனை எனேபிள் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்தால், EMI தொகையை செலுத்த மறந்து விட்டால் ஏற்படும் அபராத தொகையிலிருந்து தப்பிக்கலாம்.
கூடுதல் லோன்கள்
உங்களது ஹாம் லோனை கட்டி முடிப்பதற்கு முன்பாகவே வேறொரு லோனை எடுக்க வேண்டாம். அது, உங்களது பொருளாதாரத்தை பாதிக்கும்.
மேலும், உங்களது பழைய வீட்டு லோனை கட்டுவதற்கு மறதியை கூட ஏற்படுத்தலாம்.
கூடுதல் சேமிப்பு
ஹோம் லோனுக்கு கூடுதல் பேமெண்ட்களை செலுத்தும் வகையில் கூடுதல் பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால், உங்களது லோன் பேலன்ஸ் மற்றும் வட்டியை குறைக்கும்.
ப்ரீபேமெண்ட்
நீங்கள் வாங்கியிருக்கும் ஹாம் லோனின் வட்டி மற்றும் அசல் தொகையை கழிக்கும் வகையில் ஒரு பெரிய அளவிலான தொகையை செலுத்தினால் லோனை திருப்பி செலுத்தும் செயல்முறையை விரைவுபடுத்த முடியும்.
குறைவான காலம்
நீங்கள், லோன் வாங்கும் போதே குறைவான கால அளவு கொண்ட கடனை தேர்ந்தெடுத்தால், அதிக அளவு வட்டி செலுத்துவதை தவிர்க்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |