மோடியை பின்னுக்கு தள்ளிய ராகுல்காந்தி
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தாத நபர்களை பார்ப்பது அரிது என்றே கூறலாம்.
பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் தங்களது கட்சி தொடர்பான நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தங்களது தொண்டர்களுடன் கலந்துரையாடவும் தொடர்பில் இருக்கவும் பிரச்சாரத்திற்காகவும் இதனை பயன்படுத்துகின்றனர்.
சமீபகாலமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
ராகுல் காந்தியின் பிரசாரம் மற்றும் நடைப்பயணத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பும் இருந்தது.
இந்நிலையில் ஆட்டம் கிரே என்ற டிஜிட்டல் நிறுவன தரவுகளின் மூலம் கடந்த டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை ராகுல் காந்தியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதும், அதாவது 61 சதவிகிதம் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதேநேரம் மோடியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் தெரியவந்துள்ளது.