ஒரே நேரத்தில் உணவும் மின்சாரமும் தயாரிக்கும் பிரான்ஸ் நாட்டு விவசாயிகள்
பிரான்சில் ஒரே நேரத்தில் உணவும் மின்சாரமும் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் பிரான்ஸ் நாட்டு விவசாயிகள்.
பிரான்சில் Agrivoltaics என்னும் நடைமுறை பரவலாகத் துவங்கியுள்ளது.
பிரான்சில் ஒரே நேரத்தில் உணவும் மின்சாரமும் தயாரிக்கும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது.
அதைச் செய்பவர்கள் பிரான்ஸ் நாட்டு விவசாயிகள்.
ஒரே நேரத்தில் நிலத்தை சூரிய சக்தியில் மின்சாரமும் தயாரிக்கவும் விவசாயம் செய்யவும் பயன்படுத்தும் முறைமைக்கு Agrivoltaics என்று பெயர்.
பிரான்சில் இந்த Agrivoltaics என்னும் நடைமுறை பரவலாகத் துவங்கியுள்ளது.
இந்த முறைமையில், வெயிலிலிருந்து பயிர்கள் பாதுகாக்கப்படுவதுடன், அதே நேரத்தில் சோலார் தகடுகள் மூலம் சூரிய ஒளியிலிருந்து மின்சாரமும் தயாரிக்கப்படும்.
இன்னொரு முக்கிய விடயம், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக விவசாய நிலத்தை ஆக்கிரமிக்காமல், மின்சாரம் தயாரிக்கப்படும் அதே நேரத்தில் விவசாயமும் தடையின்றி நடக்க இம்முறைமை உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.