விலைவாசி உயர்வு: பிரித்தானிய இராணுவ வீரர்களின் பரிதாப நிலை
பிரித்தானியாவில் விலைவாசி உயர்வு காரணமாக, இராணுவ வீரர்கள் உணவு வங்கிகளை நாடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
சலுகை விலை உணவுகளைக் கூட வாங்கமுடியாத நிலை
பிரித்தானிய இராணுவ வீரர்கள் சிலர், தங்கள் உணவகத்தில் சலுகை விலையில் வழங்கப்படும் உணவுப்பொருட்களைக்கூட வாங்க முடியாத நிலையில் இருப்பதாகவும்,
சிலரோ, போக்குவரத்து செலவுக்கு பணம் இல்லாததால், வீட்டுக்குச் சென்று தங்கள் அன்பிற்குரியவர்களைக் காண முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சொல்லப்போனால், Lincolnshire இராணுவ விமான தளத்திலேயே ஒரு உணவு வங்கி அமைக்கப்பட்டுள்ளதாம்.
உணவு இல்லாமல் தவிக்கும் பெண் விமானி
பெண் விமானி ஒருவர், தான் வைத்திருந்த பணத்தை தன் குழந்தைக்கு பால் பவுடர் வாங்க பயன்படுத்திவிட்டதால், நான்கு நாட்களுக்கு சூடான உணவு இல்லாமல் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.
Destiny Outreach Coningsby
இராணுவ வீரர்கள் உயிர் பிழைப்பதற்காக தொண்டு நிறுவனங்களை நாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது, கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார் வீரர் ஒருவர்.
Destiny Outreach Coningsby