பிரித்தானியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள ஒரு தகவல்
கோவிட் காலகட்டத்தில், பணக்கார நாடு என உலகமே அன்னாந்து பார்க்கும் சுவிட்சர்லாந்தில், மக்கள் இலவச உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்தன.
இந்நிலையில், பிரித்தானியாவில், உணவு வங்கிகளை சார்ந்திருப்போரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உணவு வங்கிகளை சார்ந்திருப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு
சமீபத்தில் வெளியாகிய ஆய்வு ஒன்றின் முடிவுகள், முன்னெப்போதும் இல்லாத வகையில், மேலும் மேலும் பிரித்தானியர்கள் உணவு வங்கிகளை சார்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
Independent Food Aid Network (IFAN) என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட உணவு வங்கிகளில் 90 சதவிகிதம் உணவு வங்கிகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, 2022 டிசம்பர் மற்றும் 2023 ஜனவரியில் அதிக அளவில் மக்கள் உணவு வங்கிகளை நாடிவந்ததாக தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கை 2021ஐ ஒப்பிடும்போதும் அதிகமாகும்.
யார் யார் உணவு வங்கிகளை அதிகம் சார்ந்துள்ளார்கள்?
அந்த ஆய்வு, ஓய்வு பெற்றவர்கள் மட்டுமின்றி, அரசு மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர்கள் முதலானோர் கூட உணவு வங்கிகளை அதிகம் சார்ந்துள்ளதாக கூறியுள்ள விடயம் மேலும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
எதனால் இப்படி ஒரு மாற்றம்?
விலைவாசி அதிகரிப்புதான் இப்படி ஓய்வு பெற்றவர்கள், அரசு மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர்கள் முதலானோர் கூட உணவு வங்கிகளை அதிகம் சார்ந்திருப்பதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, ஊதியம் போதுமான அளவில் இல்லாமை, அரசு உதவி கிட்டுவதில் தாமதம் போன்ற விடயங்களும் இந்த நிலைமைக்குக் காரணமாக உள்ளன.
எப்படி ஒரு கட்டத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள உணவு வங்கிகள், இனி எங்களால் சமாளிக்க முடியாது. அரசுதான் ஏதாவது செய்யவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனவோ, அதேபோல, பிரித்தானிய உணவு வங்கிகளும் தங்களால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை எனக் கூறத்துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Image: AP