Food Catering- லட்சங்களில் வருமானம் ஈட்டுவது எப்படி?
சாப்பாடு இல்லாமல் இந்த உலகில் எதுவுமே கிடையாது, அடுத்த 4 மணிநேரத்துக்கு பின்னர் நம் நினைவுகளை அனைத்துமே சாப்பாடு, தண்ணீரை நோக்கியே நகரும் என்கிறார் Food Catering-ல் அசத்தி வரும் சதிஷ்.
தமிழகத்தை சேர்ந்த சதிஷ், சிட்டி குசைன் கேட்ரர்ஸை நடத்தி வருகிறார்.
கடந்த 13 ஆண்டுகளாக மிக சிறப்பாக இந்த தொழிலை நடத்தி வரும் சதிஷ், தனது நுணுக்கங்கள் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் பேசுகையில், கோயம்புத்தூரில் தொடங்கி தற்போது தமிழ்நாடு வரை வளர்ச்சி அடைந்திருக்கிறேன்.
கல்யாண நிகழ்ச்சிகள் முதல் பெருமளவான மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு உணவை தயாரித்து வழங்கி வருகிறோம்.
எந்தவொரு தொழிலாக இருந்தாலும் எந்த அளவுக்கு நாம் முனைப்புடன், ஆர்வமாக ஈடுபடுகிறோம் என்பதை பொறுத்தே வெற்றியும் வந்து சேரும்.
என்னுடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு சமைக்கத் தொடங்கி, அக்கம்பக்கத்தினரிடம் விரிவடைந்து அப்படியே இதுவே என் தொழிலாக மாறிப்போனது.
எந்தவொரு முதலீடும் இல்லாமல் தொடங்கப்பட்டதே, இருந்தாலும் ஒரு உணவை தயாரிக்க எவ்வளவு செலவாகும், என்னென்ன தேவை, ஒரு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக் கொடுக்க எத்தனை ஆட்கள் தேவைப்படும் என்பது போன்று தெரிந்து கொள்வது அவசியம்.
ருசியாக சமைத்தாலும் அதை பரிமாறும் விதமும் உங்களை வெற்றியாளராக்கும், சிறியவர் முதல் பெரியவர் வரை யாருக்கு என்ன தேவையோ எதை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்பதையறிந்து வயிறார பரிமாறினாலே நீங்கள் ஜொலிக்கலாம் என கூறுகிறார் சதிஷ்.
நன்றி: DW Tamil
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |