இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் உடலின் முக்கிய உறுப்புகள் காலி! கவனம் தேவை
உடலில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கு சில உணவுகள் ஆகவே ஆகாது. அது போன்ற உணவுகளை தவிர்ப்பது நலம் பெயர்க்கும்.
நுரையீரல்
ப்ரோக்கோலி ஒரு ஆரோக்கியமற்ற உணவு அல்ல., அதில் பல சத்துக்கள் உள்ளது. ஆனால் இதை அதிகம் சாப்பிடுவதால் உடலில் வாயு உண்டாகும். அதிகப்படியான வாயு உங்கள் நுரையீரலை அதிக வேலை செய்ய வழிவகுக்காது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி என்பது உண்மையில் சுவையை மேம்படுத்தவும், உணவு கெடாமல் இருக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் பொதுவாக நைட்ரைட்டுகள் சேர்க்கப்படுகின்றன. இந்த இறைச்சிகளின் பிரச்சனை என்னவென்றால், அவை உடலை ஒரு அழற்சி எதிர்வினைக்கு அனுப்புகின்றன.இது நுரையீரல் அமைப்புக்கு அழுத்தம் கொடுத்து அதன் செயல்பாட்டை குறைக்கும்.
இதயம்
சிவப்பு இறைச்சி உணவுகளான மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை தவிர்க்குமாறு பல மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். சிவப்பு இறைச்சியில் இருக்கும் கார்னைடைன் எனும் மூலப்பொருள் இதயத்தை பாதிக்கும் Trimethylamine-N-oxide (TMAO) -ஐ உருவாக்குகிறது.
பீட்சாவில் நிறைய கிரீஸ், சோடியம் மற்றும் கலோரிகள் உள்ளன, இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தானது. மேலும் அதில் டிரான்ஸ்ஃபேட்-டும் இருக்கிறது. ஆகவே, இது போன்ற கண்ணுக்குத் தெரியும் மாவுப் பொருட்கள் அதிகமாக உடலில் சேரும் போது ஆபத்தாகிறது.
கல்லீரல்
பிரஞ்சு ப்ரை மற்றும் பர்கர் போன்ற கொழுப்புள்ள உணவுகளை உணவில் சேர்ப்பதை தவிருங்கள். அதிகப்படியான கொழுப்புகள் கல்லீரலில் படிந்து சிரோசிஸ் என்ற கல்லீரல் நோயை உண்டாக்குகிறது.
அதிகப்படியான சுகர் எடுப்பது கல்லீரலில் கொழுப்பு தேங்க வழி வகுக்கிறது. காரணம் சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு கல்லீரலில் தங்கி விடுகிறது. இதனால் கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படும். எனவே குறைந்தளவு மட்டுமே சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள்.