அதிக ஊட்டச்சத்து நிறைந்த கொண்டைக்கடலை தோசை… இலகுவாக செய்வது எப்படி?
கொண்டைக்கடலை என்றாலே பலருக்கும் ஞாபகத்திற்கு வருவது அதன் ஆரோக்கிய நன்மை தான். இது எடையை குறைக்கவும், உடல் எடையை அதிகரிக்கவும் உதவுகிறது.
ஒவ்வொரு விதத்தில் சாப்பிட்டால் ஒவ்வொரு நன்மைகள் கிடைக்கும். அந்தவகையில் இதை தோசை செய்து சாப்பிடுவது எப்படி என்று குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொண்டக்கடலை - 1 கப் (250 மி.லி)
- பச்சரிசி - 1/2 கப்
- வெந்தயம் - 1 தேக்கரண்டி
- இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
- பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
- தண்ணீர்
- உப்பு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 /2 தேக்கரண்டி
- நெய்
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.
2. மற்றோரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.
3. மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கொண்டைக்கடலை, பச்சரிசி+வெந்தயம், நறுக்கிய இஞ்சி, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து பின்பு 12 மணிநேரம் புளிக்கவிடவும்.
4. பிறகு மாவை கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து மாவை கரைத்து கொள்ளவும்.
5. பின்பு உப்பு மற்றும் சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.
6. தோசைக்கல்லை சூடு செய்து அரைத்த மாவில் சிறிதளவு எடுத்து தோசையாக ஊற்றவும்.
7. சுற்றிலும் நெய் ஊற்றி பின்பு திருப்பி விட்டு வேகவிட்டு எடுத்தால், சுவையான தோசை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |