நவராத்திரி விரதம் இருப்பவர்கள் என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம்?
நவராத்தி விரதம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் குறிப்பிட்ட தினங்களில் விரதம் இருப்பார்கள். ஒரு சில பெண்கள் நவராத்திரி ஒன்பது நாட்களும் விரதம் இருப்பார்கள்.
இந்த சமயத்தில் உடல் நலத்தையும், ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே நவராத்திரிக்கு என்ன சமைப்பது என்ன சாப்பிடுவது என்பது பற்றி விரதம் இருப்பவர்களுக்கு எப்போதுமே குழப்பமாகத்தான் இருக்கும். நவராத்திரி விரதமிருப்பவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள சில உணவுகளை எடுத்து கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அந்தவகையில் தற்போது அந்த உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
- ஒரு கப் கெட்டித்தயிரை கொஞ்சம் க்ரீமுடன் சேர்த்து நன்றாக மிக்ஸியில் கலந்து அடித்து இதில் உங்களின் சுவைக்கு ஏற்றவாறு தேன் அல்லது சர்க்கரை சேர்க்கலாம். பிறகு நீங்கள் விரும்பும் பழங்களை துண்டுகளாக்கி கலந்து ஃபிரிட்ஜில் சிறிது நேரம் வைத்து சாப்பிடலாம்.
- ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரியை தனியாக வறுத்து எடுத்து அரைத்து அதன் பிறகு தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து வதக்கி, விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தக்காளி விழுதில் முந்திரி அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து, உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்றாக கொதித்து பச்சை வாசனை நீங்கியவுடன் பனீர் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
- கெட்டியான பாத்திரத்தில் கொழுப்பு நீக்காத பாலை ஊற்றி, கொதிக்கும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். இடையில் முந்திரி, திராட்சை, உலர் பழங்கள் ஆகியவற்றை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பால் கெட்டியானவுடன் அதில் சர்க்கரை சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும். அதன் பிறகு கொஞ்சம் ஏலக்காய் தூள் மற்றும் வறுத்து வைத்த உலர் பழங்களின் கலவையை சேர்த்து பால் நன்றாக கெட்டியாக மாறும்வரை அடுப்பில் வைத்து கிளறவும்.
- இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி அதேபோல பன்னீரையும் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சீரகம், பச்சை மிளகாய் தாளித்து உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். அதனுடன் பின்னர் பன்னீர் துண்டுகளை சேர்த்து, இஞ்சி பேஸ்ட், உப்பு மற்றும் மிளகு சேர்த்து வதக்கி கொத்தமல்லி தூவி சாப்பிடுங்கள். இது உங்களுக்கு அதிக ஆற்றல் தரும் உணவை விரத உணவாக சாப்பிடலாம்.
- விரத நேரத்தில், அதிக நேரம் பசிக்காமல் இருக்க, வ்வரிசியை 2 – 3 மணிநேரங்கள் ஊற வைத்து, ஒரு கப் ஜவ்வரிசிக்கு அரை கப் தயிர் என்ற அளவில் கெட்டி தயிரை சேர்த்து பச்சை மிளகாய் கொத்தமல்லி சேர்த்து கலந்து மீண்டும் 1 மணி நேரம் புளிக்க வைக்கவும். அதன் பிறகு உப்பு சேர்த்து, உள்ளங்களை அளவில், தோசை ஊற்றுவது, தோசை கல்லில் ஊற்றி எடுத்து சாப்பிடவும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.