வெளியே சாப்பிடுவதால் ஏற்படும் food poisoning பிரச்சினை: தவிர்ப்பது எப்படி?
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 2.4 மில்லியன் மக்கள் food poisoning பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், இந்த food poisoning பிரச்சினையை தவிர்ப்பது எப்படி என ஆலோசனை தருகிறார் பிரித்தானிய நிபுணர் ஒருவர்.
Food poisoning பிரச்சினையை தவிர்ப்பது எப்படி?
பிரித்தானியாவின் Leicester பல்கலையின் நுண்ணுயிரியல் துறையில் (Clinical Microbiology) மூத்த விரிவுரையாளராக பணியாற்றிவருகிறார், Dr Primrose Freestone.
ஒரு நுண்ணுயிரியலாளராக, எந்தெந்த உணவுகள் Food poisoning பிரச்சினையை ஏற்படுத்தும், அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பதில் தான் கவனமாக இருப்பேன் என்று கூறும் Dr Freestone, தான் பின்பற்றும் சில விடயங்களை பகிர்ந்துகொள்கிறார்.
வெளியே சாப்பிட்டும்போது Food poisoning பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் Dr Freestone.
அதற்குக் காரணம், வெளி இடங்களில் நமக்கு சோப் போட்டு கைகழுவுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதுடன், ஈ.கோலை, சால்மோனெல்லா மற்றும் லிஸ்டீரியா போன்ற கிருமிகளை சுமக்கும் ஈக்கள் முதலான பூச்சிகள் எளிதாக உணவால் கவரப்பட வாய்ப்புள்ளதும்தான் என்கிறார் Dr Freestone.
பார்பிக்யூ வகை உணவுகள் முழுமையாக வேகவைக்கப்படவேண்டும் என்றும், ஒரு உணவுப்பொருளை 30 டிகிரி வெப்பத்தில் சில மணி நேரம் வைத்திருந்தால், அதில் கிருமிகள் இரண்டு மடங்காக பெருகிவிடும் என எச்சரிக்கிறார் அவர்.
அத்துடன், பஃபே வகை உணவுகளை உண்ணும்போது, பலர் அந்த உணவுகளை தொடுவதாலும், பூச்சிகள், தூசு மற்றும் மக்கள் உணவுக்கு அருகில் தும்முவதாலும் இருமுவதாலும் உணவில் கிருமிகள் பரவி food poisoning பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறார் Dr Freestone.
வெளியே சாப்பிடும்போது, oyster போன்ற உணவுகளை தான் தவிர்த்துவிடுவதாகக் கூறும் Dr Freestone, அவ்வகை உணவுகளில் Vibrio மற்றும் norovirus ஆகிய கிருமிகள் அதிகம் இருக்கும் என்கிறார்.
Vibrio எனப்படும் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள oyster வகை உணவில், சுவையிலோ, வாசனையிலோ எவ்வித வித்தியாசமும் இருக்காது, அதை சாப்பிடும்போதும் அதில் கிருமிகள் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது.
ஆனால், அவற்றை சாப்பிட்டால் அவை உங்களுக்கு கடுமையான உடல் நல பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்கிறார் Dr Freestone.
அதேபோல, வீட்டில் உணவு சமைக்கும்போதும், எளிதில் கெட்டுப்போகக்கூடிய, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளின் கவர்கள் ஊதிப் புடைத்திருந்தால், அந்த உணவைத் திறந்தால் அதில் வித்தியாசமான வாசம் வீசினால், அதை குப்பையில் போட்டுவிடுவது நல்லது என்கிறார் அவர்.
மேலும், பச்சை இறைச்சியையும், வேகவைத்த இறைச்சியையும் வெட்ட ஒரே பலகையை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, சமைக்கும் முன்பும், சமைத்த பின்பும் கைகளை நன்றாக கழுவுவது முதலான விடயங்கள், food poisoning பிரச்சினையை தவிர்க்க உதவும் என்கிறார் Dr Freestone.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |