பிரித்தானியாவில் தொடர்ந்து நான்காவது மாதமாக உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பு
பிரித்தானியாவில் தொடர்ந்து நான்காவது மாதமாக வருடாந்திர உணவுப்பொருட்கள் விலை வீதம் அதிகரித்துவருவதாக துறைசார் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நான்காவது மாதமாக உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பு
பிரித்தானியாவில் ஏப்ரல் மாதத்தில் வருடாந்திர உணவுப்பொருட்கள் விலை வீதம், 2.6 சதவிகிதமாக உயர்ந்த நிலையில், இம்மாதத்தில், அதாவது, மே மாதத்தில் வருடாந்திர உணவுப்பொருட்கள் விலை வீதம் 2.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக துறைசார் அமைப்பான British Retail Consortium (BRC) என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.
உணவுப்பொருட்களைப் பொருத்தவரை, குறிப்பாக, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை அதிகரித்துள்ளதே இந்த வருடாந்திர உணவுப்பொருட்கள் விலை வீதம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்கிறார் BRC அமைப்பைச் சார்ந்த ஹெலன் டிக்கின்சன் என்பவர்.
மேலும், மாட்டிறைச்சி போன்ற மாமிசம் வாங்குவோர், அவற்றின் விலையும் சற்று உயர்ந்துள்ளதை கவனித்திருக்கலாம் என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |