பிரித்தானியாவில் ஒரே மாதத்தில் 50 சதவிகிதம் உயர்ந்த உணவுப்பொருள் ஒன்றின் விலை...
கடந்த மாதத்தில் பிரித்தானியாவில் முட்டையின் விலை 50 சதவிகிதம் வரை உயர்ந்ததாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
என்ன காரணம்?
உற்பத்திச் செலவை சமாளிக்க முடியாததால் முட்டை உற்பத்தி குறைந்ததுடன், சில உற்பத்தியாளர்கள் அந்த வேலையையே விட்டு விட்டு வேறு வேலைக்குச் சென்றுள்ளார்கள். ஆகவே, முட்டை உற்பத்தை குறைந்ததால், முட்டை விலை உயர்ந்துள்ளது.
சில பல்பொருள் அங்காடிகளில் முட்டை விலை 1.70 பவுண்டுகளிலிருந்து 2.50 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.
நல்ல விடயம் என்னவென்றால், தற்போது விவசாயிகள் மீண்டும் முட்டை உற்பத்திக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளார்கள்.
Credit: Getty

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.