மத்திய கிழக்கு போர்: பிரான்சில் உயரவிருக்கும் உணவுப்பொருட்கள் விலை
மத்திய கிழக்கு போர் காரணமாக பிரான்சில் உணவுப்பொருட்கள் விலை 4 முதல் 5 சதவிகிதம் உயர இருப்பதாக நுகர்வோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பிரான்சில் உயரவிருக்கும் உணவுப்பொருட்கள் விலை
இந்த விலை உயர்வு, பச்சைக் காய்கறிகள், பழங்கள் முதல் அழகுப்பொருட்கள் வரை பாதிக்க இருப்பதாக நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் அமெரிக்கப் போரே இந்த விலை உயர்வுக்குக் காரணமாக உள்ளது. எரிபொருள் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவு அதிகரிப்பதால், அந்த விலை உயர்வு பொருட்களை வந்தடைகிறது.
குறிப்பாக, பால் பொருட்கள், பச்சைக் காய்கறிகள், யோகர்ட் போன்ற குறுகிய காலாவதி காலம் கொண்ட பொருட்கள் விலை ஏற்கனவே உயர்ந்துவிட்டது.
போர் நீடிக்கும் நிலையில், இந்த நிலை மற்ற உணவுப்பொருட்களுக்கும் ஏற்படக்கூடும்.
போக்குவரத்து செலவுடன், பொருட்களை பார்சல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் பலவற்றிற்கும் கச்சா எண்ணெயே மூலப்பொருள் என்பதால் கச்சா எண்ணெய் விலை உயர்வு பிளாஸ்டிக் பொருட்களையும் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |