நாவூறும் ருசியில் மணக்கும் கோதுமை பாயாசம் செய்வது எப்படி?
பாயாசம் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது, நெய் வாசனை மணமணக்க இனிப்பு சுவையுடன் முந்திரி கலந்த பாயாசம் என்றால் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அவர்களுக்காக ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த கோதுமை பாயாசம் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உடைத்த கோதுமை – 1 கப்
1 கப் பால் – 1/2 பெளல் தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
முந்திரி, பாதாம், உலர் திராட்சை- தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் உடைத்த கோதுமையைப் போட்டு அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் தண்ணீரை வடிகட்டி விட்டு குக்கரில் வேகவைத்து எடுக்கவும், தண்ணீர் முழுவதும் வற்றி கோதுமை வெந்து, கெட்டியான பதத்திற்கு வந்திருக்கும்.
அடுத்ததாக கடாயை அடுப்பில் வைத்து, வெல்லப்பாகு காய்ச்சவும், இதனுடன் மைய அரைத்த தேங்காய் துருவல் சேர்த்து விட்டு நன்றாக கலக்கி விடவும்.
பின்னர் வேகவைத்த கோதுமை சேர்த்து கலக்கி விடவும், இதனுடன் ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், உலர் திராட்சைகளை சேர்த்து ஒரு கொதி கொதிக்க விட்டு குடித்தால் நாவூறும் ருசியில் பாயாசம் தயார்!!!