ஒரு கப் ரவை இருந்தா போதும்! இந்த ஸ்வீட் செய்து சாப்பிடுங்க
ரவை என்றவுடன் நம் அனைவருக்குமே சட்டென உப்புமா தான் நினைவில் வரும், உப்புமா என்றாலே தெரிந்து ஓடத்தான் செய்வார்கள்.
ஆனால் ரவையை வைத்து மிக சுவையான பணியாரம் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை - ஒரு கப்
சர்க்கரை - முக்கால் கப்
எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை
ரவை மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் கிரைண்டரில் அரைக்கவும்.
அரைக்கும் போதே சர்க்கரை சேர்க்கவும். வெண்ணெய் போல் அரைத்த பிறகு மாவை வழித்தெடுத்துக் கொள்ளவும்.
குழிவான கடாயில் எண்ணெய் தடவி, காய்ந்ததும் மாவை ஊற்றி எண்ணெயை சுற்றிலும் விடவும்.
திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.
குறிப்பு: மொறுமொறுப்பாக வேண்டுமானால், மேலும் 5 நிமிடம் விட்டு எடுக்க வேண்டும். மிதமான தீயில் செய்ய வேண்டும். அதிக தீயில் வைத்தால் கருகிவிடும்.