கொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம் தெரியுமா?

Food CoronaVIRUS
By Kaviarasan May 15, 2021 08:42 PM GMT
Kaviarasan

Kaviarasan

in உணவு
Report
Courtesy: MalaiMalar

கொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம் என்று நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய உணவு மற்றும் சத்தியல் துறை உதவி பேராசிரியர் விஞ்ஞானி கமலசுந்தரி கூறியதாவது:- நாம் நலமுடன் வாழ நமக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது.

நாம் உண்ணும் உணவு ஊட்டம் என்பது உடல் வளர்ச்சிக்கும், சக்திக்கும், உடல்நலத்திற்கும் மட்டுமின்றி நல்ல உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நமது உணவில் 6 வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக இருந்தால் அது கொரோனா வைரசை எதிர்கொள்ள உதவும்.

கொரோனா என்பது ஒரு வைரஸ். இது பொதுவாக ஒரு மனிதனின் நுரையீரல் மற்றும் ஜீரண மண்டலத்தை தாக்கக்கூடிய வல்லமை பெற்றது. இதனை எதிர்கொள்ள நமது உடலில் தினமும் புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் சி, நல்ல வகையான கொழுப்பு மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்கள் கொண்ட உணவை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம் தெரியுமா? | Foods Can Control Coronavirus

உடலில் செல்கள் உருவாக புரதம் தேவை. அந்த செல்கள் அழியும் போது அவற்றிற்கு பதிலாக புதிய செல்கள் உண்டாக்க வேண்டும். இந்த செல்கள் நல்ல ஆரோக்கியமாக அமைய மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் அமைய நமக்கு மிகவும் அவசியம் இந்த புரதம். அளவு மட்டுமின்றி அதனுடைய தரமான தன்மை மிகவும் அவசியம். 

அதற்கு மாமிச வகை புரதங்கள் அல்லது தானியம் மற்றும் பயறு 4:1 என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டால் நல்லது. பால், முட்டை, பயறு வகைகள், இறைச்சி, மீன் போன்ற உணவுகளில் புரதம் உள்ளன. நாளொன்றுக்கு ஒரு நபருக்கு அவருடைய எடைக்கு ஏற்றவாறு ஒரு கிராம் என்ற அளவு ஏற்றபடி உண்ண வேண்டும்.

கொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம் தெரியுமா? | Foods Can Control Coronavirus

75 கிலோ உடல் எடை என்றால் 75 கிராம் உண்ண வேண்டும். ஒரு கப் (150 கிராம்) சுண்டல் உண்டால் அதில் ஏழு கிராம் புரதம் கிடைக்கும். ஒரு இட்லியை உணவில் எடுத்துக்கொண்டால் 2 கிராம் புரதம் கிடைக்கும். ஒரு கப் பால் எடுத்துக்கொண்டால் 5 கிராம் புரதம் கிடைக்கும். ஆகவே எளிதாக இந்த புரதத்தை நம் உணவுகளில் எடுத்துக்கொள்ளலாம்.

எண்ணெய் வித்துக்கள் சேர்த்து எடுத்துக்கொண்டால் நல்ல புரதம் கிடைக்கும். வைட்டமின் ஏ சத்து நாம் தினமும் உண்ணும் பழங்கள், காய்கறிகளில் நிறைந்துள்ளன. கேரட், பப்பாளி, கறிவேப்பிலை, மாம்பழம், மஞ்சள் பூசணிக்காய் போன்றவற்றில் இந்த சத்து உள்ளன.

இது ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 800 மைக்ரோ கிராம் தேவைப்படுகிறது. நமது உணவில் 200 கிராம் அளவு இந்த பழங்களை எடுத்துக்கொண்டாலே வைட்டமின் ஏ சத்து எளிதாக கிடைக்கும். வைட்டமின் சி சத்து உடலில் நல்ல ஒரு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வல்லமை படைத்தது.

கொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம் தெரியுமா? | Foods Can Control Coronavirus

தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு, மாங்காய் போன்ற பழங்களில் உள்ளன. குறைந்தது எலுமிச்சை, நெல்லிக்காய் ஜூஸ் 30 மில்லி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் டி சத்து சூரிய வெளிச்சத்தில் உள்ளது. தினந்தோறும் சூரிய வெளிச்சத்தில் 10 நிமிடத்திற்கு மேல் நின்றாலே நமது தோலில் இந்த வைட்டமின் டி சத்து உருவாகி விடும்.

உணவுகளில் மிகவும் அரிது. மீன் எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே இது உள்ளன. இத்தகைய உணவுகள் 10-ல் இருந்து 15 மி.லி. சேர்த்தால் போதுமானதாகும். துத்தநாக சத்து பழுப்பு அரிசி, எண்ணெய் வித்துக்கள், முந்திரி, பூசணிக்காய், கொண்டைக்கடலை போன்ற உணவுகளில் உள்ளன.

இந்த தாது உப்பு எதிர்ப்பு சக்தியை வலுவாக்க ஒரு நல்ல சத்தாகும். இது ஒரு நபருக்கு 2 மில்லி கிராம் அளவு தேவைப்படுகிறது. நல்ல சத்தான உணவுகளில் இது உள்ளன.

கொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம் தெரியுமா? | Foods Can Control Coronavirus

இந்த சத்து ஒரு கப் கொண்டைக்கடலை, சுண்டல் எடுத்துக்கொண்டால் 2.5 மில்லி கிராம் கிடைக்கும். தயிர் போன்றவற்றிலும் இந்த துத்தநாகம் உள்ளது. கருப்பு சுண்டல், தோல் உளுந்து, ஆளி விதை போன்ற உணவுகளில் கொழுப்பு சத்து உள்ளன.

இந்த ஆளி விதைகளை தினந்தோறும் 10 கிராம் அளவு வறுத்து பொடி செய்து நாம் அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொண்டாலே இந்த கொழுப்பு சத்து எளிதாக கிடைத்து விடும். இது மட்டுமின்றி நமது உணவுகளில் காரத்தன்மை அதிகமாக இருந்தால் அது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லமை படைத்தது.

இதன் அடிப்படையிலேயே கசாயங்கள் போன்றவை உண்பதற்கு வலியுறுத்தப்படுகிறது. இந்த காரத்தன்மை உணவுகளில் பழங்கள், காய்கறிகள், மசாலா பொருட்கள், மூலிகைகளான துளசி, ஓமவள்ளி, புதினா, வெற்றிலை, பூண்டு, பால் போன்ற உணவுகளில் உள்ளன. மேலும் எந்த உணவு எடுத்துக்கொண்டாலும் அதனை சூடாக உண்ண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு

12 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை, Toronto, Canada

14 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US