இந்த உணவுகளை முடிந்தளவு ஒதுக்கிடுங்க! இல்லேன்னா நுரையீரல் காலி
மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிக முக்கியமானதாக நுரையீரல் உள்ளது. தவறான உணவுபழக்கங்கள் மற்றும் தீய பழக்கங்கள் நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
பர்கர்
பர்கர்கள் குறிப்பாக, ஆஸ்துமா உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. அதை தொடர்ந்து சாப்பிட்டால் மூச்சுத்திணறல் ஏற்படும். ஃபாஸ்ட் ஃபுட் பர்கர்களில் கொழுப்பு அதிகம். இது போன்ற உணவுகள் சிஓபிடி மற்றும் ஆஸ்துமா தொடர்பான அறிகுறிகளை அதிகப்படுத்தும்.
The Standard
மது
இரவில் மது அருந்துவது பல இடங்களில் ஒரு கொண்டாட்டமாகவே உள்ளது. குறிப்பாக மாலை நேரத்திற்கு பின்னர் மது அருந்துவது உங்கள் நுரையீரலை சிறந்த நிலையில் வைத்திருக்க உதவாது. இது பின்னாளில் நுரையீரல் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
பால் பொருட்கள்
பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அவற்றை அதிகமாக உட்கொண்டால், அவை நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, பால் பொருட்களை ஒரு அளவிற்கு மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
krishijagran
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
இறைச்சியைப் பாதுகாக்க நைட்ரைட் என்ற தனிமம் சேர்க்கப்படுகிறது. அது, நுரையீரலில் வீக்கம் மற்றும் பதற்றத்தை ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
webmd
உப்பு
உப்பு கிட்டத்தட்ட எல்லா உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது. சரியான அளவில் அதை உணவில் சேர்த்தால் பிரச்சினை கிடையாது. சுவாசிப்பதில் உங்களுக்கு பிரச்சினை இருந்தால் உப்பை குறைத்து கொள்வது நல்லது. அதிக உப்பை உண்பது சுவாச மண்டலத்தில் அழுத்தத்தை அதிகரித்து வீக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதை மறவாதீர்கள்.
foodnavigator