வயிற்றை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் 5 பழங்கள்!
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளின் அடிப்படையிலே நம் உடல்நலம் இருக்கிறது.செரிமான கோளாறு , மலச்சிக்கல் போன்றவற்றால் வயிற்று பிரச்சனை உண்டாகிறது.
கோடைகாலத்தில் பொதுவாக பலருக்கு செரிமான பிரச்சினை, மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
உடலில் நீர்ச்சத்து குறைதல், குடலில் ஆரோக்கிய அமிலங்களின் குறைபாடு காரணமாக பாக்டீரியாக்கள் உருவாகிறது.
சில பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் நம் வயிற்றை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்கிறது.
ஆப்பிளில் உள்ள நார்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதுடன் குடல் பாக்ட்டீரியக்கள் உருவாகுவதை தடுக்கிறது.
பப்பாளி பழத்தில் உள்ள பாப்பைன் என்சைம் செரிமான சக்தியை அதிகரிக்கிறது.மேலும் மலச்சிக்கலை தீர்க்க உதவுகிறது.
ஆரஞ்சு பழத்தில் உள்ள சிட்ரஸ் அமிலம் குடல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கிறது.
கொய்யா பழத்தில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் பண்பு வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துகிறது .
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் குடல் கழிவுகளை நீக்கி சுத்தப்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |