கண் பார்வை ஷார்ப்பாக தெரிய வீட்டில் இதை சாப்பிட்டால் போதும்! மூக்கு கண்ணாடிக்கு குட் பை
இன்றைய கால மாற்றத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூக்கு கண்ணாடி அணிவதையும், பார்வை கோளாறுகளால் பாதிக்கப்படுவதையும் காணுகிறோம்.
நிறைய நேரம் டிவி பார்ப்பது, செல்போன் பார்ப்பது, லேப்டாப், கம்ப்யூட்டர் இப்படியாக நம் கண்களுக்கு ஓய்வே இல்லாமல் போய்விட்டது.
கண்கள் மற்றும் பார்வைகளில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கவும், அதற்கான உணவுகள் குறித்து காண்போம்.
வைட்டமின் "ஏ'
ஒளி ஆற்றலை நரம்புத் தூண்டுதல் மூலமாக விழித்திரைக்கு எடுத்துச்செல்லுதல் மற்றும் பார்வை நிறமிகளை உருவாக்குவதன் மூலம் மாலைக்கண் நோயைத் தடுக்கும் முக்கிய பணியைச் செய்கிறது. ஜாதிக்காய், கேரட், பச்சை காய்கறிகள், பப்பாளி, தக்காளி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, குடை மிளகாய், சிறிய மீன்கள், ஆட்டு ஈரல் இவையும் கண்களுக்கு நல்லது.
Getty/Olesia Shadrina/crossfit
வைட்டமின் "சி'
கண் புரையைத்தடுக்க உதவுகிறது, கண்ணில் உள்ள இணைப்புத் திசுக்களுக்கு உறுதியளிப்பதுடன், சீரான ரத்த ஓட்டத்திற்கும் துணை புரிகிறது.நெல்லிக்காய், பப்பாளி, எலுமிச்சை, மிளகாய், கொய்யாப்பழம், ஆரஞ்சு நிற பழங்கள், கீரைகள், தக்காளி இவைகளை எடுத்து கொள்ளலாம்.
வைட்டமின் "ஈ'
லியூட்டின் மற்றும் ஜுசான்த்தின் ஆகியவற்றுடன் இணைந்து கண் புரை தோன்றுவதை தடுக்கிறது. முக்கியமான கொழுப்பு அமிலங்களுடன் இணைந்து கண்களைக் காக்கிறது. பாதாம், சூரியகாந்தி விதை, செறிவூட்டப் பட்ட தானியங்கள், கடல் உணவுகள் சாப்பிடலாம்.
mymillets
ப்ரோக்கோலி
கண்களில் படும் அதிக வெளிச்சத்தினால் கண்களுக்கு ஏற்படும் அழுத்தத்தினால் உண்டாகும் பார்வைக்கோளாறை சரி செய்யும் ப்ரோக்கோலி . இதில் வைட்டமின் பி, லூடைன், ஜீஏந்த்ஏக்ஸ்கின் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது.
அவகேடோ அல்லது பட்டர் ப்ரூட்
கண் பார்வைத் திறன் அதிகரிக்கும் அனைத்து சத்துக்களும் அதாவது வைட்டமின் பி, சி, ஈ லூடைன், பீட்டா கரோடின் கொண்டது அவகேடோ.
iris