உடல் பலவீனம்.. எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்க! கால்சியம் அதிகம் கொண்ட உணவுகள் இதோ
அன்றாட வாழ்வில் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.
உடலில் ஏற்படும் சத்துக்குறைபாடு காரணமாக உடலின் சில பகுதிகளில் வலி ஏற்படுகிறது.
உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால் முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எலும்பு மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கால்சியம் முக்கிய பங்குவகிக்கிறது.
கால்சியம் குறைபாடு ஆண்களை விட பெண்களுக்கு அதிகளவில் உள்ளது. எனவே பெண்களுக்கு முதுகு மற்றும் மூட்டு வலி அதிகளவில் ஏற்படுவதால் பெண்கள் கட்டாயம் கால்சியம் நிறைந்த உணவுகளை பின்பற்ற வேண்டும்.
கால்சியம் நிறைந்த உணவுகள் தினசரி தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.கால்சியம் நிறைந்த உணவுகள் என்னவென்றால்,
தயிர்
தயிரில் அதிகளவு கால்சியம் உள்ளதால் தினசரி உணவில் எடுத்துக்கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து உட்கொள்வதால் எலும்புகள் வலுவடையும், மேலும் தயிர் சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியமடையும்.
தயிரில் போதுமான புரதம், கால்சியம், ரிபோஃப்ளேவின், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் முதுகு வலியில் இருந்து நிவாரணம் கொடுக்கும்.
சோயா பால்
உடலின் கால்சியம் சத்தை அதிகரிப்பதற்கு சோயா பால் சிறந்தது.சோயா பாலில் கால்சியம், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
உங்கள் ஹீமோகுளோபின் அளவையும் சோயா பால் அதிகரிக்கும்.
பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகள் உடலில் கால்சியம் குறைபாட்டை நிறைவு செய்யும்.இவற்றில் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை ஏராளமாக உள்ளன.
முதுகு மற்றும் மூட்டுகளில் வலி இருந்தால், பச்சை காய்கறிகளை சாப்பிடத் தொடங்குங்கள். கோஸ், கீரை போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த காய்கறிகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனுடன், எலும்புகள் மற்றும் தசை வலிகளும் நீங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |