மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை
சில வருடங்கள் முன்பு வரை மக்கள் மூன்றாம் உலகப்போர் குறித்து அதிகம் கவலைப்பட்டிருக்கமாட்டார்கள்.
ஆனால், என்று உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதோ, அப்போதிருந்தே மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சம் உருவாகத் துவங்கிவிட்டதை மறுப்பதற்கில்லை.
இந்நிலையில், துரதிர்ஷ்டவசமாக மூன்றாம் உலகப்போர் வெடிக்குமானால், பொதுமக்கள் என்னென்ன உணவுப்பொருட்களை சேமித்துவைக்கவேண்டும் என்பது குறித்து பிரித்தானிய உணவுப்பொருட்கள் விற்பனை நிறுவனம் ஒன்று ஆலோசனை கூறியுள்ளது.
என்னென்ன உணவுகளை சேமித்துவைக்கவேண்டும்?

உக்ரைன் ஊடுருவல் துவங்கியபோது விலைவாசி அதிகரித்ததையும், உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு உருவானதையும் சுட்டிக்காட்டும் Food Bunker என்னும் பிரித்தானிய உணவுபொருட்கள் விற்பனை நிறுவனம், கீழ்க்கண்ட 9 உணவுப்பொருட்களை மக்கள் சேமித்துவைக்கவேண்டும் என்கிறது.
அவையாவன, தேன், அரிசி, பீனட் பட்டர், Energy bars, நீரகற்றப்பட்ட மாமிசம் (Dehydrated meat), OXO Cubes, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், பால் பவுடர் மற்றும் vanilla extract!

இவற்றில், தேன் அதிக கலோரிகள் கொண்டது . அது கெட்டுப்போகவே போகாது. அரிசியை ஐந்து ஆண்டுகள் வரை சேமித்துவைக்கலாம்.
பீனட் பட்டரையும் ஐந்து ஆண்டுகள் வரை சேமித்துவைக்கலாம். சில பால் பவுடர்களை 25 ஆண்டுகள் வரை சேமித்துவைக்கலாமாம்.
ஒருவேளை, போர் வந்து வெறும் மாவும் வெண்ணெயும் மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகும் என்றால், உணவுக்கு கொஞ்சம் வாசனை கொடுக்க vanilla extractஐ சேர்த்துக்கொள்ளலாம். அது கெட்டுப்போகவே போகாது என்கிறது Food Bunker நிறுவனம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |