வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
கோடைக்காலத்தில் அதிக வெப்பம் மற்றும் வறண்ட காலநிலை காரணமாக உடல் எளிதில் சோர்வடையும்.
வெயில் அதிகரிக்கும் போது வெப்பம் சார்ந்த நோய்கள் வர வாய்ப்பு கூடும்.
அதனால் கோடையில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், உடலுக்கு ஏற்ற லேசான உணவுகளை சாப்பிடுவதும் அவசியம்.

இந்த காலத்தில் உடல் வறட்சி, செரிமான பிரச்சினைகள், நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை போன்றவை அதிகரிக்கலாம்.
ஆரோக்கியமாக இருக்க சில உணவுகளை சாப்பிடுவது எப்படி முக்கியமோ, அதேபோல் சில உணவுகளை தவிர்ப்பதும் அவசியம்.
அந்தவகையில், கோடையில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் குறித்து பார்க்கலாம்.
என்னென்ன உணவுகள்?
சிவப்பு இறைச்சி- சிவப்பு இறைச்சியில் புரதம், இரும்புச்சத்து அதிகமாக இருந்தாலும், கோடைகாலத்தில் அதைத் தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை குளிர் பானங்கள்- சர்க்கரை குளிர்பானங்கள் தாகத்தை குறைக்கும் போல தோன்றினாலும், அவை உடலை நீரிழப்புக்கு உள்ளாக்கி, சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தம் தரும்.
பால் பொருட்கள்- பால், பனீர், வெண்ணெய் போன்ற பால் பொருட்கள் செரிக்க சற்று கடினம். அவற்றில் கொழுப்பு அதிகம் இருப்பதால் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

துரித உணவுகள்- பஜ்ஜி, வடை, பீட்சா, பர்கர் போன்ற பொரித்த மற்றும் துரித உணவுகள் கோடையில் தவிர்ப்பது நல்லது. அவை செரிக்க கடினமாக இருக்கும்.
காரமான உணவுகள்- காரமான மற்றும் எண்ணெய் அதிகமான உணவுகள் உடல் வெப்பத்தை அதிகரித்து, செரிமானத்தையும் பாதிக்கும்.
நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்- நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் ஆரோக்கியமானவை என்றாலும், கோடையில் அவற்றை அளவாக மட்டுமே சாப்பிட வேண்டும். அவை உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |