புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும் உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
புற்றுநோய் என்பது உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடற்று, அசாதாரணமாக வளர்ந்து அருகிலுள்ள திசுக்களை அழித்து, உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் ஒரு நோயாகும்.
புகையிலை, மது, தவறான உணவுமுறை, மரபணு மாற்றங்கள் மற்றும் கதிர்வீச்சு போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.
சோர்வு, விவரிக்க முடியாத எடை இழப்பு, வலி மற்றும் தோல் மாற்றங்கள் ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும்.
பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.
அந்தவகையில், புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும் உணவுகள் குறித்து பார்க்கலாம்.

என்னென்ன உணவுகள்?
சர்க்கரைவள்ளிக் கிழங்கு- இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள சேதத்தை குறைத்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை மெதுவாக்க உதவும்.
பெர்ரி பழங்கள்- இதில் வைட்டமின், நார்ச்சத்து மற்றும் நல்ல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. செரிமான மண்டலத்தை பாதுகாக்க உதவும்.
சிலுவைக் காய்கறிகள்- ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்றவற்றில் புற்றுநோயை எதிர்க்கும் சத்துக்கள் உள்ளன. அடிக்கடி சாப்பிட்டால் அபாயம் குறையும்.
மீன்- இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது அழற்சியை குறைத்து, சில புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்க உதவும்.
டார்க் சாக்லேட்- அதிக கோகோ உள்ள டார்க் சாக்லேட் நல்ல ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்கும். மேலும் குடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
புளிக்கவைக்கப்பட்ட உணவுகள்- இது நல்ல பாக்டீரியாக்களை வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பூண்டு- இதில் உள்ள அல்லிசின் என்ற சத்து, புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்க உதவும்.
நட்ஸ்- இது நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்தவை. குறிப்பாக புற்றுநோயை எதிர்க்க உதவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |