பலரும் விரும்பும் இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடாதீங்க! உங்க கல்லீரல் சீக்கிரம் பாதிச்சிடும் உஷார்
நமது உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று.
கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் தான் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும். நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களை சேகரிக்கும் வேலை, பித்த நீர் சுரப்பு, பிலிரூபின் என்ற புரத உருவாக்கத்திற்கு, ரத்த செல்கள் உருவாக, தேவைப்படும் போது ஆற்றலை தர என்று ஏகப்பட்ட வேலைகளை கல்லீரல் செய்கிறது.
மதுப்பழக்கம், புகைப்பழக்கம் மட்டும் கல்லீரலை பாதிப்பதில்லை. நாம் உண்ணும் சில வகை உணவுகளும் கல்லீரலை பாதிப்படைய செய்கின்றன.
கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து காண்போம்
கொழுப்பு உணவுகள்
பிரஞ்சு ப்ரை மற்றும் பர்கர் போன்ற கொழுப்புள்ள உணவுகளை உணவில் சேர்ப்பதை தவிருங்கள். அதிகப்படியான கொழுப்புகள் கல்லீரலில் படிந்து சிரோசிஸ் என்ற கல்லீரல் நோயை உண்டாக்குகிறது. எனவே உங்க கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பிராக்கோலி மற்றும் காபி
நிறைய காய்கறிகள் கல்லீரலை பாதுகாக்க உதவினாலும் பிராக்கோலி கல்லீரல் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பிரக்கோலி கல்லீரலை ஆல்கஹால் அல்லாத கொழுப்பு நோயி லிருந்து காக்கிறது. எனவே இதை நீங்கள் பாதாம் பருப்பு, க்ரான்பெர்ரி இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லையென்றால் வினிகர் மற்றும் பூண்டு டன் வதக்கி சுவையாக சாப்பிடலாம்.
காபி உடம்பிற்கு கேடு விளைவிக்கும் என்பார்கள். ஆனால் ஒரு நாளைக்கு 2-3 கப் எடுத்து வருவது உங்க கல்லீரலை பாதுகாக்கிறது
சர்க்கரை
அதிகப்படியான சுகர் எடுப்பது கல்லீரலில் கொழுப்பு தேங்க வழி வகுக்கிறது. காரணம் சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு கல்லீரலில் தங்கி விடுகிறது. இதனால் கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படும். எனவே குறைந்தளவு மட்டுமே சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள். கார்பனேட்டேடு பானங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஜூஸ்கள், கேக் வகைகள் இவற்றில் அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்பட்டால் தவிர்த்து விடுங்கள்.
உப்பு
நமது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையில் இருக்க உணவில் உப்பு சேர்ப்பது அவசியம். அதே நேரத்தில் அதிகப்படியான உப்பால் (சோடியம்) கல்லீரலில் நார்த்திசுக்கட்டிகள் உருவாக வாய்ப்புள்ளது. இது கல்லீரல் பாதிப்பை உண்டாக்கி விடுகிறது. எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள், உப்பு சேர்க்கப்பட்ட ஊறுகாய்கள் போன்றவற்றை தவிருங்கள். போதுமான அளவு மட்டுமே உணவில் உப்பை சேருங்கள்.
கல்லீரலை பாதிக்கும் வேறு சில காரணங்கள்
தவறான உணவுப் பழக்கம்
அதிக உடல் எடை
அதிக மதுப்பழக்கம்
புகைப்பிடித்தல்
பாக்கெட் உணவுகள்