சர்க்கரை நோயாளிகள் காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்
நீரிழிவு நோயாளிகள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டியிருக்கும் நிலையில் அவர்களுக்கு ஏற்ற உணவுகளை பார்க்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் உணவை சீரான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலை ஏற்படும்.
தங்கள் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பற்றி குறிப்பாக கவனம் செலுத்த வேண்டும்.
காலை உணவுகள்
சர்க்கரை நோயாளிகள் காலை நேரத்தில் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவையும், சரியான அளவில் புரதச்சத்து நிறைந்த உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதோடு, உணவில் சர்க்கரை இல்லாமல் இருக்க வேண்டும் அல்லது சர்க்கரை குறைவாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஓட்ஸ்
நீரிழிவு நோயாளிகள் காலையில் ஓட்ஸ் சாப்பிடலாம். இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதனுடன் ப்ளூபெர்ரிகள், உலர் பழங்கள் மற்றும் விதைகளை சேர்த்து சாப்பிடலாம்.
முட்டைகள்
சர்க்கரை நோயாளிகள் புரதச்சத்து நிறைந்த முட்டைகள் காலை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்ததாகும். இதில் உள்ள புரதம் இரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்த உதவுகிறது. காலை நேரத்தில் வேகவைத்த முட்டைகளை சாப்பிடலாம்.
தயிர் மற்றும் முளைத்த பயறு
முளைகட்டிய பயறு மற்றும் தயிரில் அதிக புரதம் மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்திருப்பதால் சர்க்கரை நோயாளிகள் காலையில் இதனை சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கும். இதனுடன், காய்கறிகளைச் சேர்த்து சாலட் செய்தும் சாப்பிடலாம்.
ராகி தோசை
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ராகி தோசையை எடுத்துக் கொள்ளலாம். இதில், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால் சர்க்கரையை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |