ஆயுளை அதிகரிக்க உதவும் உணவுகள்.., மருத்துவர் கூறும் விளக்கம்
நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்கின்ற ஆசை நாம் அனைவருக்கும் இருக்கும்.
ஊட்டச்சத்து நிபுணர்கள் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் மட்டும்தான் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
அந்த வகையில் ஆயுளை அதிகரிக்க உதவும் உணவுகள் குறித்து மருத்துவர் சிவராமன் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Getty
மருத்துவர் கூறும் உணவு டயட்
காலை உணவு
கொண்டைக்கடலை- முதல் நாள் இரவே ஊறவைத்த கொண்டைக்கடலையை வேகவைத்து அதனுடன் மிளகு தூள், கொத்தமல்லி, மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிடலாம். உப்பு சேர்க்கவேண்டாம்.
இதே போல் ராஜ்மா, நிலக்கடலை, பாசி பயிறு போன்ற பயிறு வகைகளை தினம் ஒன்று என வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம்.
புரதம் நிறைந்த உணவுகளான முட்டை, பால் பன்னீர் அல்லது சோயா பன்னீர், பாதம், நிலக்கடலை போன்றவற்றை காலை உணவில் எடுத்துக்கொள்ளலாம்.
அனைத்து காய்கறிகளும் வேகவைத்து சேர்த்த காய்கறி சூப் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகும் பசித்தால் பழங்களை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மதிய உணவு
மதிய உணவில் எடுத்துக்கொள்ளப்படும் சாதம் சிகப்பரிசி, கருப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா, வரகரிசியை எடுத்துக்கொள்ளவேண்டும்.
காய்கறிகள் மற்றும் கீரைகள் நிறைந்த உணவுகளை மதிய உணவில் எடுத்துக்கொள்வது அவசியமாகும்.
இறைச்சி எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக மீன்கள் முதலிடத்தில் இருக்க வேண்டும். அதன் பிறகு மட்டன், கருங்கோழி எனப்படும் கடக்நாத் கோழியை உணவில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
இரவு உணவு
இரவு உணவை 6- 7 மணிக்குள் இருப்பது அவசியமாகும். அதன் பிறகு பசித்தால் பழங்களை எடுத்துக்கொள்வது வழக்கமாக்கி கொள்ளவேண்டும் என்கிறார்.
தினமும் உணவில் கொஞ்சம் வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம், சிரியவெங்காயம் சேர்த்துக்கொள்வது ஆயுளை அதிகரிக்க உணவும் என மருத்துவர் அறிவுறுத்துகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |