தொப்பை வராமல் தடுக்க உதவும் இயற்கை உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
Foods that help to reduce belly fat- பெரும்பாலோருக்கும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.
உடல் எடையை அதிகரிக்க அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.
அதேபோல், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாதது, துரித உணவுகள் போன்றவையும் உடல் எடைக்கு பல காரணங்கள் உண்டு.

இதேபோல், உடலில் தேவைக்கு அதிகமான கலோரிகள் சேர்ந்து, உடல் உழைப்பு இல்லாமல் போவதால் தொப்பை உருவாகிறது.
இது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு தீங்குகளை விளைவிக்கும்.
அந்தவகையில், தொப்பை வராமல் தடுக்க உதவும் உணவுகள் குறித்து பார்க்கலாம்.
என்னென்ன உணவுகள்?
முட்டை - முட்டையில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இது நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்க உதவும். உடலுக்குத் தேவையான முக்கிய அமினோ அமிலங்களும் முட்டையில் உள்ளன.
முட்டைகோஸ்- முட்டைகோஸ், காலிஃபிளவர் மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. எனவே இவற்றை தினசரி உணவில் சேர்த்துகொள்ளலாம்.
தக்காளி- தக்காளியும் குறைந்த கலோரி கொண்ட உணவாகும். 100 கிராம் தக்காளியில் சுமார் 18 முதல் 22 கலோரிகள் மட்டுமே இருக்கும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு- சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது வயிறு நிறைந்த உணர்வை நீண்ட நேரம் தருவதால் அதிகமாக சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த உதவும்.
வெள்ளரிக்காய்- வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளன. இதனால் உடல் எடையைக் கட்டுப்படுத்தும் உணவுமுறையில் வெள்ளரிக்காயை சேர்த்துக்கொள்ளலாம்.
தயிர்- தயிரில் புரதம், கால்சியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பாக்டீரியாக்கள் உள்ளன. தயிருடன் வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளைச் சேர்த்து சாப்பிடலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |