மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 6 உணவுகள்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க
வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது.
உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால், அதில் உள்ள சத்துகள் குறைந்து போய் விடும்.
இதனால் உடல் ஆரோக்கியங்கள் சீர்குலைந்துவிடும். இதனால் புட் பாய்சனிங், இதய நோய், புற்று நோய் வர, வழிவகுத்து, உயிருக்கே ஆபத்தை அழித்துவிடும்.
kung_tom/Shutterstock
மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன என்று பார்ப்போம்.
காளான்
காளானில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. அதனை மறுபடியும் சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறும். இது செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.
எனவே காளானை சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது.
முட்டை
முட்டையை ஒருபோதும் மீண்டும் சூடாக்கி சாப்பிடக்கூடாது. முட்டைகளில் புரதச்சத்து மிக அதிகமாக உள்ளது, இதனை மீண்டும் சூடுபடுத்தும் போது, விஷமாக மாறும்.
இது உங்கள் ஆரோக்கியத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு சேர்த்த பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது.
மீண்டும் சூடாக்குவதன் மூலம், அதன் ஊட்டச்சத்துக்கள் அழிந்து செரிமான அமைப்பையும் பாதிக்கிறது.
பீட்ரூட்
பழைய பீட்ரூட் உணவை ஒருபோதும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இதைச் செய்வதன் மூலம், அதில் உள்ள நைட்ரேட் அழிக்கப்படுகிறது.
சிக்கன்
சிக்கன் உணவை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இது உங்களுக்கு செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
JASON DONNELLY
கீரை
கீரையை ஒரு போதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது ஏனெனில் அதில் உள்ள நைட்ரேட் சிதைந்து, அதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
Westend61/Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |